நடிகர் அருண் விஜய் மற்றும் பிரியா பவானிசாகர் நடிப்பில், இயக்குனர் ஹரி இயக்கத்தில் வரும் 17ம் தேதி யானை திரைப்படம் வெளியாக உள்ளது. படத்தை ரசிகர்களுக்கு கொண்டு சேர்க்கும் விதமாக படக்குழு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணம் செய்து வருகிறது. இன்று சேலம் மாவட்டம் வருகை தந்த படக்குழு திரையரங்கில் ரசிகர்கள் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டனர். 



திரையரங்கில் இருந்த ரசிகர்கள் அருண் விஜய் மற்றும் இயக்குனர் ஹரிக்கு உற்சாக வரவேற்பு அளித்து ஆரவாரம் செய்தனர். பின்னர் ரசிகர்களிடையே பேசிய அருண் விஜய்,


"நீண்ட காலத்திற்குப் பிறகு தமிழ் பாரம்பரியமான வேட்டியை கட்டிக்கொண்டு யானை படத்தில் நடித்துள்ளேன். அது மன நிறைவையும் மகிழ்ச்சியையும் தருகிறது. யானை படத்தை திரையரங்கங்களில் வரும் 17ம் தேதி கொண்டாட தயாராகுங்கள்" என்று ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார். அதன்பின் ரசிகர்களுடன் அருண் விஜய் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.



இதைத்தொடர்ந்து அருண் விஜய் மற்றும் இயக்குனர் ஹரி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது முதலில் அருண் விஜய் பேசியபோது,


கொரோனா பாதிப்புக்கு பிறகு சினிமாத்துறை குறித்து பயத்தில் இருந்தோம். ஆனால், தற்போது நல்ல திரைப்படங்களுக்கு திரையரங்குகளில் மக்களிடையே நல்ல வரவேற்பும், வசூலும் அதிகளவில் உள்ளது. இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறினார். மேலும் திரைப்படங்களை பார்த்து விட்டு ரசிகர்கள் திரைப்படத்திற்கு ஏற்றார் போல தங்களது மனநிலையை மாற்றிக் கொள்வது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், திரைப்படங்களில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக்கொண்டு தீய விஷயங்களை ரசிகர்கள் விட்டுவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


மேலும் அஜித் நடித்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது, அதேபோன்று வருங்காலங்களில் ரஜினி, கமல் போன்ற நடிகர்களுடனும் திரைப்படத்தில் வாய்ப்புகள் கிடைத்தால் பெரும் பாக்கியமாகக் கருதுவேன் என்றார். ஹீரோ கதாபாத்திரமாக இருந்தாலும், வில்லனாக கதாபாத்திரமாக இருந்தாலும் நடிப்பதற்கு நான் தயார் என்று கூறியுள்ளார்.


இதை தொடர்ந்து இயக்குனர் ஹரி கூறும்போது, நான் எடுக்கும் திரைப்படங்கள் முதலில் தியேட்டரில் மட்டும்தான் வெளியிடுவேன். அதன் பின்னர் ஓடிடியில் வெளியிடட்டும். நான் எடுக்கும் திரைப்படத்தால் விநியோகஸ்தர்கள் முதல் திரையரங்கில் இருசக்கர வாகனங்களுக்கு டோக்கன் போடும் கடைநிலை ஊழியர் வரை முதலில் பயன் பெறட்டும். அதன்பின்னர் மற்றவர்களுக்கு பயன் கிடைக்கும் என்பதுதான் என்னுடைய எண்ணம். அதற்காக நான் ஓடிடி தேவையில்லை என்று கூறவில்லை. ஒவ்வொன்றும் அடுத்தடுத்த தொழில்நுட்ப வளர்ச்சிகள் தான், முதலில் டிவியில் துவங்கி தற்போது ஓடிடி வரை வந்துள்ளது. ஓடிடியையும் நான் வரவேற்கிறேன் என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண