WhatsApp Feature : வாட்ஸ் அப்பில் ஆடியா கால்களில் நண்பர்களுடன் கான்பரன்சில் இணைவது போன்ற புதிய அம்சத்தை வாட்ஸ் அப் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வாட்ஸ்-அப் செயலி:
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், போட்டி செயலிகளிடம் வீழ்வதை தவிர்க்கும் வகையிலும், பயனாளர்களே போதும் போதும் என கூறும் அளவிற்கு தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை வாரி வழங்கி வருகின்றன.
குறுந்தகவலை பகிர்ந்து கொள்வதற்கான முதன்மை செயலியாக, வாட்ஸ்-அப் செயலி தொடர்ந்து நீடிப்பதற்கு மெட்டா நிறுவனம் வழங்கும், இந்த அடுத்தடுத்த அப்டேட்களும் முக்கிய காரணமாகும். அந்த வகையில்தான் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக அடுத்ததாக, புதிய அப்டேட்களை அடுத்தடுத்து வழங்குகிறது.
புதிய வசதி
அந்த வகையில் தற்போது, வாட்ஸ் அப்பில் ஆடியா கால்களில் நண்பர்களுடன் கான்பரன்சில் இணைவது போன்ற புதிய அம்சத்தை வாட்ஸ் அப் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக, வீடியோ கால்களில் தான் பயனர்கள் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடன் இணைந்து பேசும் வசதி உள்ளது.
ஆனால் தற்போது வாட்ஸ் அப் ஆடியோ காலில் (Whatsapp audio call) கான்பரன்சில் பேசுவது போன்ற புதிய அம்சத்தை வாட்ஸ் அப் அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கான ஒரு ஐகானையும் (Icon) விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. தற்போது வீடியோ கால்களுக்கு மட்டும் கான்பரன்ஸ் வசதி இருந்த வரும் நிலையில், விரைவில் வாட்ஸ் ஆடியோ கால்களுக்கு கான்பரன்ஸ் வசதி அறிமுகமாக உள்ளது. இந்த புதிய வசதி தற்போதைய சூழலில் பீட்டா பயனாளர்களுக்கு மட்டுமே இந்த அம்சம் கிடைக்கப்பெற, விரைவில் அனைத்து ஐஓஎஸ் பயனாளர்களுக்கும் இந்த புதிய அப்டேட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
அண்மையில் வெளிவந்த அப்டேட்
பயனர்களின் பிரைவஸிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் லாக் சாட் (lock chat) என்ற புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி மூலம் பயனர்கள் ஒருவருடனான சாட்டை (chat) பிரத்யேகமாக லாக் செய்து வைத்துக் கொள்ள முடியும். மேலும், வாட்ஸ்-அப் செயலியில் அனுப்பிய மெசேஜை 15 நிமிடங்களுக்குள் திருத்தி அனுப்பும் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
ஏற்கனவே போட்டோ மற்றும் வீடியோக்களை மற்றொரு நபருக்கு அனுப்பும்போது, அதில் கேப்ஷன் சேர்க்கும் வசதி பயன்பாட்டில் உள்ளது. அந்த கேப்ஷனை திருத்தி எழுதவும், டெலிட் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க