வாட்ஸ் அப்பில் தொடர்பு எண்ணை ’Save’ செய்யும் வசதியை மெட்டா அறிமுகம் செய்துள்ளது. இது வாட்ஸ் அப் செயலில் உள்ள யூசர் பெயரை வைத்து சேமிக்கும் முறையை அடிப்படையாக கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப் செயலியை வாங்கிய பிறகு தங்களது பயனாளர்களின் வசதிக்கு ஏற்ப அவ்வப்போது புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. பயன்பாட்டு அனுபத்தை மேம்படுத்த மெட்டா நிறுவனம் பல்வேறு புதிய தொழில்நுட்ப அப்டேட்களை தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது.


தனிப்பட்ட பயன்பாடு, வேலை, தொழில் உள்ளிட்டவற்றுக்கு வாட்ஸ் அப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களுக்கு அதன் அனுபவத்தை சிறப்பாக செய்ய வேண்டிய அப்டேட்களை வழங்கி வருகிறது. ஜூன்,2024 ம் ஆண்டு மெட்டா AI வெளியானது. வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மெசெஞ்சர், இன்ஸ்டாகிராம் என இவை மூன்றிலும் உங்களுக்கு தேவையான தகவல்களை தெரிந்துகொள்ளலாம். கூகுளில் தேட வேண்டிய அவசியத்தை குறைத்துள்ளது எனலாம். 


Contact Save Update:


இப்போது வெளியாகியுள்ள அப்டேட்டில் வாட்ஸ் அப் செயலில் புதிய தொடர்பு எண்களை சேமிக்க முடியும். ஏற்கனவே, மொபைலில் சேமித்த எண்கள் மட்டுமே வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்ய முடியும் என்றிருந்தது. இப்போது வாட்ஸ் அப்ல தொடர்பு எண்ணை சேவ் செய்ய முடியும்.  'Sync Contacts to Phone' என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.


அதாவது 'Choose to Save only WhatsApp or Sync to your Phone' இவற்றில் உங்களுக்கு ஏற்றதை தேர்வு செய்து கொள்ளலாம். தொழில் ரீதியாக வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்கள், தனிப்பட்ட பயன்பாடு என எதுவாக இருந்தாலும் அதற்கேற்றவாறு செட்டிங்ஸை மாற்ற முடியும். 


வாட்ஸ் அப்பில் சேமிக்கும் தொடர்பு எண்கள் “Identity Proof Linked Storage” என்ற தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டது என்று மெட்டா தெரிவித்துள்ளது. இதில் வாட்ஸ் அப் க்ளவுட்டில் சேமிக்கும் தொடர்பு எண்களை Back-up செய்து எந்த டிவைசில் வேண்டுமானாலும் பயன்படுத்தில் கொள்ளலாம். க்ளவுட் முறையில் சேமிக்கவில்லை என்றால் ஸ்மாட்ஃபோன் ஸ்டோரேஜ்ஜில் இருக்கும். 


Cloudflare என்ற நிறுவனத்துடன் இணைந்து வாட்ஸ் அப் இந்த புதிய தொழில்நுட்ப வசதியை அறிமுகம் செய்துள்ளது. டெலிகிராம், சிக்னல் ஆகியவற்றில் உள்ளதுபோல வாட்ஸ் அப்பில் இன்னும் ’usernames' பயன்படுத்தும் முறை இன்னும் அறிமுகம் ஆகவில்லை. இந்த வசதி விரைவில் அறிமுகம் ஆக உள்ளது. அதன் பின்னர், தொடர்பு எண்ணை அவர்களின் ‘User Name' கொண்டே வாட்ஸ் அப்பில் சேமிக்க முடியும் என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.  இந்த வசதி வாட்ஸ் அப் செயலி, வெப் வர்ஷன் மற்றும் நீங்கள் எத்தனை டிவைஸ்களில் வாட்ஸ் அப் ஆக்டிவ் செய்திருக்கிறீர்களோ அதிலிருந்தே தொடர்பு எண்ணை சேவ் செய்யலாம். தொடர்பு எண்ணை சேமிக்க இனி ஸ்மார்ட்ஃபோன் தேவையில்லை. 


WABetainfo-வில் வெளியாகியுள்ள தகவலின் படி, மெட்டா ஏ.ஐ. சாட் பாக்ஸில் உள்ள உரையாடல்களை மானிட்டர் செய்யும். அதில் உங்களுக்கு தேவையானதை கேட்டால் அது தேடி தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒருவரின் பிறந்தாள், ஏதேனும் முக்கியமான நாட்களை நினைவுகூர்தல் ஆகியவற்றிற்கு உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.