வாட்ஸ் அப் :
உலகின் நம்பர் ஒன் செயலியான வாட்ஸ் அப் பல புதிய மற்றும் சுவாரசியமான அம்சங்களுடன் பல அப்டேட்டை அறிமுகப்படுத்தவுள்ளது.
‘Delete for Everyone’ :
வாட்ஸப்பில் அறிமுகமான ‘Delete for Everyone’ என்னும் வசதி பலரின் வரவேற்பை பெற்றது . இதன் மூலம் தவறுதலாக நாம் அனுப்பும் குறுஞ்செய்திகளை அழிக்க முடியும். ‘Delete for Everyone’ அம்சத்திற்கான காலக்கெடுவை நீட்டிக்க நிறுவனம் சோதனையில் ஈடுபட்டிருந்தாக ஆன்லைன் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிய வந்தது. இந்த நிலையில் நிறுவனம் சில பீட்டா பயனர்களுக்கு இந்த அம்சத்தை வெளியிடத் தொடங்கியுள்ளது. ஃபேஸ்புக்கிற்குச் சொந்தமான வாட்ஸ் அப் செயலியானது ‘Delete for Everyone’ வசதிக்கு ஒரு மணிநேரம், எட்டு நிமிடங்கள் மற்றும் 16 வினாடிகள் காலக்கெடு வைத்திருக்கிறது. இதன் மூலம் குறிப்பிட்ட நேரத்திற்குள் அனுப்பிய செய்தியை அழித்துவிடலாம். இந்த வரம்பிற்குப் பதிலாக Delete for Everyone’ அம்சத்தின் கால வரம்பை இரண்டு நாட்கள் மற்றும் 12 மணிநேரமாக அதிகரிக்கச் செய்யும் பணியில் WhatsApp ஈடுபட்டுள்ளது. முதற்கட்டமாக iOS பீட்டா பயனாளர்களுக்கு இந்த வசதி அறிமுகமாகியிருப்பதாக கூறப்படுகிறது.
முதல் முறை அல்ல :
வாட்ஸ்அப் 2018 இல் அனைவருக்கும் Delete அம்சத்தை அறிமுகப்படுத்தியது. அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில், இந்த அம்சம் பயனர்கள் ஒரு செய்தியை அனுப்பிய 7 நிமிடங்களுக்குள் நீக்கவோ அல்லது நினைவுபடுத்தவோ உதவியது.பின்னர், நிறுவனம் வரம்பை 1 மணி நேரம் 8 நிமிடங்கள் 16 வினாடிகளாக உயர்த்தியது. எனவே, வாட்ஸ்அப் வரம்பை அதிகரிக்கத் திட்டமிடுவது இது முதல் முறை அல்ல.
வாய்ஸ் நோட் ஸ்டேட்டஸ் :
ஏற்கனவே புகைப்படம், வீடியோவை ஸ்டேட்டஸாக வைக்கும் வசதி உள்ள நிலையில் குரல்பதிவையும் ஸ்டேட்டஸாக வைக்கும் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் புதிய அப்டேட்டாக கொடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வகை ஸ்டேட்டஸ்-ற்கு பெயர் 'வாய்ஸ் ஸ்டேட்டஸ்' என்று வைத்துள்ளார்கள். மற்றபடி எழுத்து, புகைப்படம், விடியோ ஸ்டேட்டஸ் வைப்பது போலவே எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனாகவே, நாம் தேர்வு செய்பவர்களுக்கு மட்டுமே காட்டுவது போன்ற வசதியுடன் வருகிறது. வாய்ஸ் நோட் விரும்பிகளின் இடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள இந்த அப்டேட் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்