பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் தற்போது 15 வயது சிறுமி ஒருவருக்கு எதிராக நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


டெல்லியின் நாங்கோலாய் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்பிரகாஷ். இவர் அங்கு உள்ள ஒரு ஷூ தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2ஆம் தேதி 15 வயது மதிக்க தக்க சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அச்சிறுமியின் தந்தை டெல்லி மகளிர் ஆணையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். 



அந்தப் புகாரில், “கடந்த 2ஆம் தேதி என்னுடைய மகளை ஜெய்பிரகாஷ் என்ற நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன்பின்னர் அவர் 5ஆம் தேதி என்னுடைய மகளை தடுத்து நிறுத்தி வாயில் ஒரு அமிலத்தை ஊற்றியுள்ளார். இதன்காரணமாக என்னுடைய மகள் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்” எனத் தெரிவித்திருந்தார். 


 


இவரின் புகாரை தொடர்ந்து டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவால் காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதைத் தொடர்ந்து காவல்துறையினர் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்தச் சிறுமியின் வாயில் அமிலம் ஊற்றப்பட்டிருந்ததால் அவரிடம் வாக்குமூலம் வாங்குவதில் தாமதம் ஏற்பட்டது. 




மேலும் படிக்க:சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கணவன்..! செல்போனில் படம்பிடித்து ரசித்த மனைவி..! உத்தரபிரதேசத்தில் கொடூரம்..!




இந்தச் சூழலில் நேற்று அச்சிறுமியிடன் இந்தச் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வாங்கப்பட்டது. மேலும் இந்தச் சம்பவத்தில் ஜெய்பிரகாஷின் மனைவிக்கும் தொடர்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆகவே இவர்கள் இருவரையும் காவல்துறையினர் பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஜெய்பிரகாஷ் மீது போக்சோ சட்டம், கொலை செய்யும் முயற்சி சட்டப்பிரிவு 307 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சில நாட்களில் அமிலம் சிறுமி வாயில் ஊற்றப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கு டெல்லி மகளிர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண