மிட்டா மிராசு, கிழக்கும் மேற்கும் போன்ற தமிழ் படங்களை இயக்கியவர் இயக்குநர் களஞ்சியம். இவர் சிறந்த கதை, எழுத்தாளருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை வென்றவர்.


களஞ்சியம், அவர் இயக்கிய சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் நடிகை தேவயானி குறித்தும் நடிகர் மற்றும் இயக்குனருமான மணிவண்ணன் குறித்தும் அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.


இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ”கிழக்கும் மேற்கும் படத்தில் பூபதி தான் ஸ்டில் போட்டோகிராபர். அவர் தேவயானியை ஸ்டில் எடுக்கும்போது “தேவயானி இங்கே பாருங்க” என்று சொல்லிவிட்டார். அதற்கு ’எப்படி நீ என்னை தேவயானி என்று சொல்லலாம்! ஒரு ஸ்டில் போட்டோகிராபர் நீ எப்படி என் பேரை சொல்லலாம். இயக்குனர் கூப்பிடலாம், ஒளிப்பதிவாளர் கூப்பிடலாம், அவர்களை தவிர வேரு யாரும் என் பேரை சொல்லி கூப்பிடக்கூடாது, மேடம் என்று தான் கூப்பிடனும்’ என்று சொல்லிவிட்டார் தேவயானி.




’நீ என்னிடம் மணிப்பு கேட்க வேண்டும்’ என்றும் சொல்லிவிட்டார். அப்போ அந்த பொண்ணுக்கு தமிழ் அவ்வளவாக தெரியாது. இந்தி பேசுவார், ஆங்கிலம் பேசுவார். எனக்கு இந்தி தெரியும், அதனால் நான் தான் கம்மியுனிகேட் பண்ணுவேன். அங்கே இருந்த எல்லோரும் என் நண்பர்கள்தான். ஸ்டில் போட்டோகிராபர் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என்று தேவயானி கூற, மன்னிபெல்லாம் தேவையில்லை என்று நாங்கள் இருந்தோம்.


இந்த செய்தி பத்திரிக்கையில் வந்து பெரிய பிரச்சினை ஆச்சு. ஒரு 10 நாள் பிறகு, மணிவண்ணன் சார் படப்பிடிப்பிற்காக வந்திருந்தார். வந்தவுடன், எங்கே அந்த பொண்ணு தேவயானி, வர சொல்லுங்க அந்த பொண்ணை என்று கூப்பிட்டார். அவர்கள் இருவரும் முன்னாடி காதல் கோட்டை படத்தில் நடித்து இருக்கிறார்கள்.


Also Read | OPS - STALIN:’ஓபிஎஸ் நலம்பெற வேண்டும்’ அதிமுக ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் ட்வீட்


தேவயானி வந்தவுடன் ’எம்மா பெயர் எதற்கு வைக்கிறார்கள், கூப்பிடுவதற்காக தானே. பெயர் வைக்கும்போது அவர்கள் கூப்பிடலாம் இவர்கள் கூப்பிடக்கூடாது என்று பார்த்து பெயர் வைக்க முடியது. பெயரை கூப்பிடும்போதுதான் 4 பேருக்கு உன் பெயர் தெரியும். அதனால் நீதான் மன்னிப்புக் கேக்க வேண்டும்’ என்று கூறினார். இது அந்த பொண்ணுக்கு ஒரு தெளிவைக் குடுத்துச்சு. பிறகு ஆல்பம் தயாராகி எல்லோரும் பார்த்துக்கொண்டு இருந்தோம். அப்போது ஆல்பமை பார்த்த தேவயானி, பூபதியிடம் ’ஐ ஆம் சோ சாரி’ என்று கூறி மன்னிப்பு கேட்டார்.




ஒரு இயக்குனருக்கு பிரச்சினை என்றால் உடனே ஒடி வந்து விடுவார் மணிவண்ணன். அந்த அளவிற்கு நெருங்கிய நட்பு எங்களுக்குள். கிழக்கும் மேற்கும் படத்திலிருந்து மிட்டா மிராசு படம் வரை தொடர்ந்து நாங்கள் ஒன்றாக வேலை செய்தோம். என்னுடைய முதல் படம் அவருடைய 42வது படம். அவர் எவ்வளவு சீனியர் என்பதை நீங்கள் பார்க்கலாம். நான் மிட்டா மிராசு படத்தின்போது, ஒரு டெஸ்ட் ஷாட் எடுத்துகிட்டு இருந்தேன். அது எனக்கு ஃபெயிலியராகவே வந்தது. சிறிது நேரம் பிறகு நான் மணிவண்ணன் சார், பிரபு சார் என அனைவரும் அமர்ந்திருந்த இடத்தைப் பார்த்தேன். மணிவண்ணன் சார் நான் பார்ப்பதை பார்த்து எழுந்து வந்து, அவர்தான் எனக்கு அந்த காட்சியை எடுத்துக் கொடுத்தார்.


ஒரு கடுமையான இடச்சாரி சிந்தனையாளர் மற்றும் பொது உடமை தத்துவராக இருந்தார். கம்யுனிஸ்ட் கட்சி செய்த ஒரு நல்ல விஷயம் அவரை கட்சியை விட்டி நீக்குனது தான். இல்லை என்றால் அவர் இயக்குனராக ஆகியிருக்க மாட்டார். கடைசியாக மரணிக்கும் போது ஒரு மிக பெரிய தமிழ் தேசியவாதியாக மறைந்தார்”           என்று இயக்குனர் களஞ்சியம் , நடிகர் மணிவண்ணனைப் பற்றி கூறியிருந்தார்.