Whatsapp Feature: இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்று வாட்ஸ் அப்பிலும் 'Username' வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


வாட்ஸ் அப்:


தகவல் தொடர்புக்காக எத்தனையோ செயலிகள் இருந்தாலும், புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டாலும், அவற்றிற்கு எல்லாம் முன்னோடியாக வாட்ஸ்-அப் செயலி உள்ளது. குறுந்தகவல்களை பரிமாறிக் கொள்ளும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி, அலுவலகங்களின் பாதி வேலையை இருந்த இடத்தில் இருந்து கொண்டெ முடிக்கும் அளவிற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த செயலி மெட்டா குழுமத்திற்கு கீழ் வந்த பிறகு, அதனை மேலும் மேலும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது புதிய வசதியை கொண்டு வர உள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.


புதிய அப்டேட்:


அதன்படி,  வாட்ஸ் அப்பில், 'Username' ஆப்ஷனை மெட்டா நிறுவனம் கொண்டு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் இருப்பதுபோன்று 'Username'  ஆப்ஷனை மெட்டா கொண்டு வர உள்ளது. ஏற்கனவே,  வாட்ஸ் அப்பில் நம்பர் ஆப்ஷன் மட்டும்  உள்ளது.  இந்நிலையில், வரக்கூடிய  'Username' ஆப்ஷன் பயனர்களின் செல்போன் எண் மற்ற பயனர்களுக்கு காட்டப்படாது. மேலும், உங்கள் மொபைலில் பதியாத எண்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட எண்களுக்கும் கூட உங்களது வாட்ஸ் எண் காட்டப்படாது.  இதன் மூலம் மொபைல் எண்கள் மூலம் நடக்கும் மோசடியை இது தடுக்கும்.


இருப்பினும், உங்கள் மொபைலில் பதிவு செய்யப்பட்ட நபர்களுக்கு உங்கள் மொபைல் நம்பர் காட்ட விரும்பினால், அதற்கு ஏற்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளலாம்.  அதாவது, பயனர்களுக்கு 'Username' அல்லது 'Phone Number' என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், திரையில் ஏதாவது ஒன்று தான் தோன்றும்.  Setting ஆப்ஷனுக்குள் சென்று profile- ஐ கிளிக் செய்து, அதற்கு வலதுபக்கத்தில் 'Create Username' என்ற ஆப்ஷன் இருக்கும். அங்கு, தங்களுக்கு விருப்பப்பட்ட Username-ஐ  பயனர்கள் வைத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அண்மையில் வந்த கட்டுப்பாடுகள்:



அண்மையில் வாட்ஸ்-அப் குழுமம் வெளியிட்ட அறிக்கையின்படி, “நெக்சஸ் 7, சாம்சங் கேலக்ஸி நோட்2, ஹெச்டிசி ஒன், சோனி எக்ஸ்பீரியா இசெட், LG Optimus G Pro, சாம்சங் கேலக்ஸி எஸ்2, சாம்சங் கேலக்ஸி எக்ஸ் நெக்ச்ஸ், ஹெச்டிசி சென்சேஷன், மோட்டோரோலா டிரயோடு ரைர், சோனி எக்ஸ்பீரியா எஸ்2, மோட்டோரோலா ஜூம், சாம்சங் கேலக்ஸி டேப் 10.1, ஆசஸ் ஈ பேட் டிரான்ஸ்ஃபார்மர், ஏசர் ஜகோனியா டேப் A5003, சாம்சங் கேலக்ஸி எஸ், ஹெச்டிசி டிசைனர் எச்டி, LG Optimus 2X, சோனி எரிக்சன் எக்ஸ்பீரியா Arc3 ஆகிய மொபைல்களில் வரும் அக்டோபர் 24ஆம் தேதி முதல் வாட்ஸ் அப் செயலி இயங்காது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.