எளிய முறையில் தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்வதில் உலக அளவில் பெரும் புரட்சியை செய்துள்ளது வாட்ஸ்-அப் செயலி. பிளே-ஸ்டோரிலிருந்து 500 கோடிக்கும் அதிகமான பதிவிறக்கங்களை பெற்றுள்ள இந்த செயலி, உலகளவில் இந்தியாவில் தான் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. 


மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்-அப் டெவலர்ப்பர்கள் அந்த செயலியில் பல்வேறு புதிய அம்சங்களை உருவாக்க மற்றும் கொண்டு வர தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். வாட்ஸ்-அப் செயலியின் புதிய அப்டேட்கள் எப்போதுமே சில அற்புதமான அப்டேட்களை உள்ளடக்கியிருக்கும். அந்த வகையில் அடுத்ததாக சில புதிய அப்டேட்களை, வாட்ஸ்-அப் செயலி விரைவில் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


அட்மின்களுக்கான புதிய அம்சம்:


ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான சமீபத்திய பீட்டா அப்டேட்டில், வாட்ஸ்அப் குழுவின் நோக்கம் (SUBJECT) மற்றும் விளக்கங்களுக்கான(DESCRIPTION) எழுத்து வரம்பை அதிகரித்துள்ளது. முன்பு வாட்ஸ்-அப் குரூப்பின் சப்ஜெக்டை  எழுதுவதற்கான வரம்பு 25 எழுத்துகளாக இருந்தது. ஆனால் விரைவில், பயனர்கள் 100 வார்த்தைகள் வரை எழுத முடியும். கூடுதலாக, விளக்கங்களுக்கான எழுத்துகளின் வரம்பு 512-லிருந்து 2048 வரை அதிகரிக்கும். இது குழுவின் தலைப்பு மற்றும் நோக்கத்தை, உறுப்பினர்களிடையே அட்மின் முறையாகவும், முழுமையாகவும் விளக்குவதை எளிதாக்குகிறது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த அம்சம் தற்போது ஆண்ட்ராய்டு பீட்டா சோதனையாளர்களுக்குக் கிடைக்கிறது.  விரைவில் அனைத்து பயனாளர்களுக்கு இந்த அம்சம் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


”New Fonts” வசதி:


புதிய எழுத்துருக்களை (Fonts) சேர்க்கவும் வாட்ஸ்-அப் செயலி டெவலப்பர்கள் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் GIFs-களை எடிட் செய்வதன் மூலம், புதிய எழுத்துருக்களை சேர்க்க முடியும் எனவும் கூறப்படுகிறது.  புதிய அப்டேட் மூலம் Calistoga, Courier Prime, Damion, Exo 2 மற்றும் Morning Breeze ஆகிய புதிய எழுத்துருக்கள் வாட்ஸ்-அப் செயலியில் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


வாட்ஸ்-அப் செயலியில் புதிய அப்டேட்:






 

வாய்ஸ் மெசேஜ் ஸ்டேடஸ்:


அண்மையில், ஆண்ட்ராய்ட் வர்ஷன்  2.22.21.5 பீட்டா அப்டேட்டின் படி, வாய்ஸ் மெசேஜ்களை வாட்ஸப் ஸ்டேடஸ் ஆக வைக்கும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும், அதற்கான பணிகளில் வாட்ஸப் தொழில்நுட்ப குழுவினர் செயல்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.