உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் , வாட்ஸப் செயலியானது பயன்பாட்டில் இருக்கிறது. இந்நிலையில் குறுஞ்செய்தி அனுப்புதல், ஆடியோ கால், வீடியோ கால்,தனிப்பட்ட பயன்பாடு, வேலை, தொழில் உள்ளிட்டவற்றுக்கு வாட்ஸ் அப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

Continues below advertisement

வாட்சப் அப்டேட்டுகள்:

இந்நிலையில் வாட்ஸ் அப் செயலியில், பயனாளர்களின் வசதிக்கு ஏற்ப அவ்வப்போது புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது , இந்த நிறுவனம். மேலும் பயன்பாட்டு அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், பல்வேறு புதிய தொழில்நுட்ப அப்டேட்களை உருவாக்கும் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. 

Continues below advertisement

சிறப்பான அமசங்கள்:

இந்நிலையில், வாட்சப்பில் சிலர் அறியாத அம்சம் ஒன்று இருக்கிறது. அது என்னவென்றால், ஒரு புகைப்படத்தை அனுப்பும் போது, அத்துடன் தற்போதைய நேரம் மற்றும் இடம் ( location Map ) அனுப்பலாம். இதன் மூலம் , ஒரு புகைப்படத்தை அனுப்பும் போது , நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என ,அவர்களுக்கு உணர்த்த முடியும்.  உதாரணத்திற்கு நீங்கள் கொடைக்கானல் போகிறீர்கள், அங்கு , ஒரு இயற்கை அழகு காட்சியளிக்கும் இடத்தை, புகைப்படம் எடுக்கிறீர்கள். அந்த புகைப்படத்தை , உங்கள் நண்பருக்கு அனுப்புகிறீர்கள். ஆனால் , சிலர் நம்பக் கூடும், சிலர் ஏமாற்றுகிறார்கள் கூட நினைக்க கூடும். ஆனால், வாட்சப்பில் , இந்த அம்சம் மூலம், புகைப்படத்துடன் இடத்தையும் நேரத்தையும் அனுப்பும் போது ,,நீங்கள் இருப்பதும் உறுதி செய்யப்படும். ஆகையால், இது ஒரு சிறந்த அம்சம் என்றே சொல்லலாம். 

சரி , அதை எப்படி பயன்படுத்துவது என பார்ப்போம்

முதலில் வாட்சப்பில், யாருக்கு அனுப்ப வேண்டுமோ, அவரது சேட்டில் போய்விடுங்கள், பின்னர்,அனுப்ப நினைக்கும்  புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள்

பின்னர் கிராப் பட்டனை தேர்வு செய்யுங்கள்பின்னர் அதன் அருகில் இருக்கும் எமோஜியை தேர்வு செய்யுங்கள்

இதையடுத்து, கீழே, நேரம் மற்றும் மேப் இடுகுறி இருக்கும்உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்து, விரும்பியவர்களுக்கு அனுப்பி மகிழுங்கள்.