Pushpa 2 Box Office: முதல் நாளே 'கங்குவா' லைப் டைம் வசூலை காலி பண்ண போகுதாம் 'புஷ்பா 2'; பாக்ஸ் ஆபீஸ் விவரம்!

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி உள்ள 'புஷ்பா 2' திரைப்படம் பான் இந்தியா படமாக வெளியாகி மோசமான தோல்வியை சந்தித்த, 'கங்குவா' வசூலை முதல் நாளே முந்தும் என சில கருத்து கணிப்பு கூறுகிறது.

Continues below advertisement

அல்லு அர்ஜுன் நடிப்பில், 2021 ஆம் ஆண்டு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் 'புஷ்பா'. செம்மர கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம், கலவையான விமர்சனத்தை பெற்ற போதிலும், வசூரில் ரூ.500 கோடியை எட்டியதாக கூறப்பட்டது.

Continues below advertisement

புஷ்பா தி ரூல்:

மேலும் புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகத்தில் நடித்ததற்காக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. தெலுங்கு திரை உலகை சேர்ந்த நடிகர்கள் யாருமே இதுவரை சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெறாத நிலையில், அல்லு அர்ஜுனுக்கு கிடைத்த இந்த விருது அவருக்கு  மிகப்பெரிய கௌரவத்தை கொடுத்தது.

இந்நிலையில் இன்று 'புஷ்பா தி ரூல்' என்கிற பெயரில், இரண்டாவது பாகம் வெளியானது. கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக அல்லு அர்ஜுன் தன்னுடைய முழு கவனத்தை செலுத்தி நடித்து வந்த இந்த படம் வெளியாகி, வழக்கம் போல சில எதிர்மறை விமர்சனங்களை பெற்று வரும் போதிலும்,  ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.


உலகம் முழுவதும் சுமார் 12,500 திரையரங்குகளில் வெளியான 'புஷ்பா 2' திரைப்படம், கே.ஜி.எப் படம் பார்க்கும் உணர்வை கொடுப்பதாகவே பொது ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதே நேரம் புஷ்பா கதாபாத்திரத்தில் வாழ்ந்து நடித்துள்ள அல்லு அர்ஜுனுக்கு மற்றொரு தேசிய விருது கிடைத்தாலும் அது ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பதே விமர்சகர்கள் கூறும் கருத்து. 

புஷ்பாவின் மனைவி,  ஸ்ரீவள்ளியாக வரும் ராஷ்மிகாவும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார்.  பகத் பாசில் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் அவரவர் நடிப்பில் பட்டையை கிளப்பி உள்ளனர். முதல் பகுதி கொடுக்கும் சுவாரஸ்யம் இரண்டாம் பகுதியில் மிஸ் ஆவதாக கூறுகிறார்கள். படத்தின் நீளமும் இப்படத்திற்கு மைனஸாக அமைந்துள்ளது. 

கங்குவா வசூலை ஒரே நாளில் முறியடிக்குமா புஷ்பா 2

இந்த படத்தின் முதல் நாள் வசூல் விவரம் குறித்து சானிக் இணையலாதம் கணித்து கூறியுள்ளதாவது, ப்ரீ புக்கிங் வசூலிலேயே 'புஷ்பா 2' 100 கோடியை அள்ளிவிட்ட நிலையில், உலகம் முழுவதும் 160 கோடிக்கு மேல் வாசொல் செய்யும் என தெரிவித்துள்ளது. எனவே முதல் நாளே புஷ்பா 2 திரைப்படம் ரூ.260 கோடி வசூலிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுளள்து. 


கடந்த மாதம் சூர்யா நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் பான் இந்தியா திரைப்படமாக வெளியான 'கங்குவா' இதுவரை, ரூ.150 கோடிக்கும் குறைவாகவே வசூல் செய்த நிலையில்... முதல் நாளே கங்குவாகின் லைப் டைம் கலெக்ஷனை புஷ்பா 2 மிஞ்சிவிடும் என்றே தெரிகிறது.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola