WhatsApp Feature : வாட்ஸ் அப்பில் இருக்கும் வாய்ஸ் நோட் போலவே வீடியோ மெசேஜிங் என்ற புதிய வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


குவியும் அப்டேட்கள்


மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், போட்டி செயலிகளிடம் வீழ்வதை தவிர்க்கும் வகையிலும், பயனாளர்களே போதும் போதும் என கூறும் அளவிற்கு தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை வாரி வழங்கி  வருகின்றன


மெட்டா குழுமத்தின் வாட்ஸ்-அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக தொடர்ந்து அடுத்தடுத்து அப்டேட் மீது அப்டேட்டாக வழங்கி கொண்டிருக்கிறது. ஆனாலும்,  வாட்ஸ்-அப் செயலியை பயனாளிகள் மேலும் மேலும் எளிமையாக அணுகும் வகையில், அது தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது 


புதிய வசதி


அந்த வரிசையில், தற்போது வாட்ஸ் அப்பின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வெர்ஷன்களில் வீடியோ மெசேஜ் (video message) என்கிற புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது மெட்டா. இந்த அம்சம் 60 வினாடிகள் வரை குறுகிய வீடியோக்களை பகிரும் வசதியை கொண்டுள்ளது. அதாவது, டெக்ஸ்ட் மெசேஜ் மற்றும் வாய்ஸ் மெசேஜ் அம்சங்களை போலவே, புதிய வீடியோ மெசேஜ் அம்சத்தின் வழியாக 60 வினாடிகள் வரை வீடியோவை எடுத்து பகிர்ந்துகொள்ளலாம்.


அதன்படி, வாட்ஸ் அப்பில் உள்ள ஏதேனும் ஒரு சாட்டிற்கு சென்று, அந்த சாட் பாரில் உள்ள மைக்ரோஃபோன் பட்டனை கிளிக் செய்ய வேண்டும். அது வீடியோ கேமரா பட்டனாக மாறும். இதன் மூலம் வீடியோ மெசேஜை ரெக்கார்ட் செய்து பகிர முடியும். ஆனால் மெசேகளை போன்று போனில் பகிரப்படும் வீடியோவை டவுன்லோட் செய்ய முடியாது. இது டெக்ஸ்ட் மற்றும் வாய்ஸ் மெசேஜ்களை போலவே புதிய வீடியோ மெசேஜ் அம்சமும் கூட எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ட் (end-to-end encrypted) செய்யப்பட்டவை. 


மேலும் பகிரப்படும் வீடியோ மெசேஜை ஃபார்வேட் செய்ய முடியுமா என்பது தற்போது வரை தெரியவில்லை. இருப்பினும், வியூ ஒன்ஸ் (view once) மோட்-ஐ பயன்படுத்தி அனுப்பப் படாத பட்சத்தில், உங்களுக்கு வரும் வீடியோ மெசேஜை ஸ்கிரீன் ரெக்கார்டிங் மூலம் உங்களால் சேமிக்க (save) முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க 


Special Olympics: 190 நாடுகள்.. 7 ஆயிரம் வீரர்கள்... ஜூன் 17ல் தொடங்கும் சிறப்பு ஒலிம்பிக்.. பெர்லின் கிளம்பிய இந்திய அணியினர்..!


Twitter Update: ப்ளூ டிக் பயனாளர்களே உங்களுக்குதான்.. ட்விட்டரில் வந்த புதிய அப்டேட்..! என்ன அம்சம் அது..?