ஏஐ தொழில்நுட்பம்:


மனிதர்களின் வேலைகளை எளிதாக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. தற்போது உலகில் ஏஐ கருவிகளின் பயன்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும், குறிப்பாக சாட் ஜிபிடியின் வெற்றி  தான் ஏஐ கருவிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது என்றே செல்லலாம். சாட் ஜிபிடியை பயன்படுத்துவோரின் எண்ணிகையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


சாட் ஜிபிடி போன்ற ஏஐ கருவிகள் நிச்சயம் மனித குலத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும், சாட் ஜிபிடி எதிர்காலத்தில் மக்களின் வேலைகளை கூட பறிக்கலாம் என்று கூட சொல்லப்படுகிறது. ஏஐ கருவிகளை கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்டவைகள் அறிமுகப்படுத்தி வரும் நிலையில், தற்போது மெட்டா நிறுவனமும் முழு வீச்சில் இறங்கி உள்ளது. 


வாட்ஸ் அப்பில் ஏஐ கருவிகள்:


அதன்படி, இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ் அப்பில் ஏஐ கருவிகளை செயல்படுத்துவதற்கான பணிகளில் மெட்டா நிறுவனம் இறங்கியுள்ளது. முதற்கட்டமாக வாட்ஸ் அப்பில் ஏஐ கருவிகளை அறிமுகப்படுத்த உள்ளது. அதாவது, 'சாட்பாட்' என்ற ஏஐ கருவியை  வாட்ஸ் அப்பில், அமெரிக்காவில் சில பயனர்களுக்கும் மட்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.


மேற்கொண்டு இது அனைத்து பயனர்களுக்கு சாட்பாட் கிடைக்கும் என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த 'சாட்பாட்’ ஆப்ஷன் வாட்ஸ் அப்பின் முகப்பு பக்கத்தில் இருக்கும். அதாவது, சாட், கால்ஸ், அப்டேட்ஸ் என்ற ஆப்ஷன்களுக்கு பக்கத்தில் இந்த புதிய ஆப்ஷன் கொண்டு வரப்பட உள்ளது. 


எப்படி இயங்கும்?


பொதுவாக இந்த சாட்பாட், கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதத்திலும் தகவல்களை தேடும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இணைய லிங்க்குகளுடன் கூடிய பக்கங்களுக்கு மாறாக, ஒரு உறுதியான பதிலை சாட்பாட் வழங்கும். இணையத்தில் தேடும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதே சாட்பாட்களில் முக்கிய நோக்கமாக உள்ளது.  


இப்படிப்பட்ட சாட்பாட்டை தான் மெட்டா நிறுவனம் சில யூசர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்த ஏஐ சாட்பாட் வாட்ஸ் அப்பில் பல பயன்பாடுகளுக்கு உதவுகிறது. அதாவது, சாட்களை தேடுவதற்கு, வாட்ஸ் அப் குறித்த சந்தேகங்களை தீர்ப்பதற்கு போன்றவைகளுக்கு இந்த சாட்பாட் உதவுகிறது. 


எதற்கெல்லாம் வாட்ஸ் அப் சாட்பாட் பயன்படும்?


வாட்ஸ் அப்பில் சில யூசர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்ட சாட்பாட் பல்வேறு பயன்பாடுகளுக்கு உதவுகிறது. அதன்படி, வாட்ஸ்  அப் குறித்த சந்தேகங்கள், வாடிக்கையாளர்களின் உதவி (customer support),  திட்டமிடல்கள், முன்பதிவு போன்றவற்றை பயன்படுத்த  இந்த சாட்பாட் உதவுகிறது.  குறிப்பாக, பயணங்களின் முன்பதிவு, ஒரு வேலையை நினைவூட்டுதல் போன்றவற்றிற்கும் இந்த சாட்பாட் உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க


Israel Hamas War: காசா, இஸ்ரேல் மருத்துவமனைகளுக்கு எக்ஸ் தள வருவாய் நன்கொடையாக வழங்கப்படும் - எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு