ஆறு வாரங்களுக்கு மேலாக நடந்துவரும் போருக்கு மத்தியில் இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையிலான 4 நாட்கள் தற்காலிக போர் நிறுத்ததிற்கு இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 


50 பணயக் கைதிகள்:


இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அமைச்சரவையில் கடந்த அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் தாக்குதலால் சிறைபிடிக்கப்பட்ட  50 பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வது கடினமாக முடிவு என்றாலும், இதுதான் சரியான முடிவு என்று தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவிக்கையில், “ஹமாஸ் ஒழிக்கப்படும் வரை, பணயக்கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படும் வரை போர் தொடரும். நாங்கள் போரில் ஈடுபட்டுள்ளோம். நாங்கள் எங்கள் இலக்குகளை அடையும் வரை போரை தொடருவோம். ஹமாஸை அழிக்கவும், எங்கள் பணயக்கைதிகள் அனைவரையும் திருப்பி அழைக்கும் வரை போர் முடிவுக்கு வராது. காசாவில் உள்ள எந்தவொரு அமைப்பும் இஸ்ரேலை அச்சுறுத்த முடியாது” என்று தெரிவித்தார். 


தொடர்ந்து, கத்தாரின் அதிகாரிகள் இஸ்ரேலுக்கும், ஹமாஸூக்கும் இடையிலான ஒப்பந்தத்தை சமரசம் செய்தனர். மேலும், பணயக்கைதிகள், ஒரு சில சலுகைகளை உள்ளடக்கிய ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உதவியதாகவும் பிரதமர் நெதன்யாகு தெரிவித்தார். 


 இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம்: 



  • இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடந்து கொண்டிருக்கும் போது தற்காலிகமாக நிறுத்தப்படுவது இதுவே முதல்முறை. இந்த இடைநிறுத்தலின்போது பல்வேறு தொண்டு நிறுவனங்கள் காசாவிற்குள் நுழைந்து உதவி செய்யும்.

  • இந்த 4 நாள் போர் நிறுத்தத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என 50 ஹமாஸ் அமைப்பால் விடுவிக்கப்பட இருக்கிறார்கள்.

  • இந்த போர் நிறுத்தம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது தெளிவாக தெரியவில்லை என்றாலும், பணயக்கைதிகள் வரும் வியாழக்கிழமை முதல் விடுவிக்கப்படலாம் என்று தெரிகிறது.

  • விடுவிக்கப்படும் ஒவ்வொரு 10 பணயக்கைதிகளுக்கும் கூடுதலாக ஒரு நாள் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும் என்று இஸ்ரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

  • மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தப்படுவதை வரவேற்று ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையில், ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 150 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தது. நேற்று இரவு முழுவதும் நடந்த சந்திப்பை தொடர்ந்து இரு தரப்பும் ஒப்பந்தமும் உறுதியானது. 


பணயக்கைதிகள் யார் யார்? 


கடந்த அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய பின்னர் சுமார் 240 பேரை ஹமாஸ் அமைப்பால் பணயக்கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டனர். இதில், பணயக் கைதிகளில் பாதிபேர் ஒரு குறிப்பிட்ட இசை விழாவில் கலந்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


பணயக்கைதிகளில் இஸ்ரேலிய மக்களை தவிர, இஸ்ரேலிய குடிமக்களைத் தவிர, அமெரிக்கா, தாய்லாந்து, பிரிட்டன், பிரான்ஸ், அர்ஜென்டினா, ஜெர்மனி, சிலி, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் உள்ளிட்ட சுமார் 40 நாடுகளைச் சேர்ந்த மக்களும் உள்ளனர். இதில், பாதிக்கும் மேற்பட்ட பணயக் கைதிகள் வெளிநாட்டு மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ளனர் என்று இஸ்ரேல் அரசாங்கம் தெரிவித்துள்ளது.


ஹமாஸ் அமைப்பு இதுவரை நான்கு கைதிகளை விடுவித்தது: தேதி வாரியாக யார் யார் என்று பார்க்கலாம். 



  1. அக்டோபர் 20 ம் தேதி-அமெரிக்காவை சேர்ந்த ஜூடித் ரானன், (59 வயது) மற்றும் அவரது மகள் நடாலி ரானன் (17 வயது)

  2. அக்டோபர் 23 ம் தேதி -இஸ்ரேலிய பெண்கள் நூரிட் கூப்பர், (79 வயது)  மற்றும் யோச்செவ்ட் லிஃப்ஷிட்ஸ், (85 வயது)

  3. அக்டோபர் 30 ம் தேதி - இஸ்ரேலிய தரைவழிப் படையெடுப்பின் போது, ​​பணயக்கைதியாக இருந்த ஓரி மெகிதிஷ் என்ற வீரர் மீட்கப்பட்டார்.

  4. மேலும், காசா நகரில் 19 வயதான இஸ்ரேலிய வீரர் நோவா மார்சியானோ உட்பட இரண்டு பணயக்கைதிகளின் உடல்களை மீட்டதாக இஸ்ரேலிய இராணுவம் இந்த மாத தொடக்கத்தில் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.