ஆறு மணி நேரமாக ஃபேஸ்புக், வாட்சப், இன்ஸ்டாகிராம் என சோஷியல் மீடியா பக்கங்கள் அனைத்தும் நேற்று முடங்கியிருந்தது. இந்த விவரம் தெரியாத பலரும் ’ஆட்டோ கண்ணாடியத் திருப்புனா வண்டி ஓடும்!’ ரகமாக தங்களது ஃவை-பை -யை ஸ்விட்ச் ஆஃப் செய்து ஆன் செய்வது, மொபைல் டேட்டாவில்தான் பிரச்னை போல என்று டேட்டாவை ஆஃப் செய்து ஆன் செய்வது, மொபைலை ஃப்ளைட் மோடில் போட்டுவிட்டு மீண்டும் அதனை சாதாரண மோடில் இயக்குவது என அத்தனை தகிடுதத்த வேலைகளையும் பார்த்தனர். சிலர் ஒருபடி மேலே போய் தங்களது மொபைல் நெட்வொர்க்கை கழுவி ஊற்றிக் கொண்டிருந்தனர்.




விவரம் இதுதான் என அறிந்ததும் ட்விட்டரில் ஒன்று கூடிய பலர் தங்களது மொபைல் நெட்வொர்க் ஆப்பரேட்டரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தனர். இதில் அதிகம் பாதிக்கப்பட்டது ஏர்டெல்தான். இருந்தாலும் அதற்கெல்லாம் அசருவோமா நாங்கள் என ஒவ்வொரு ட்வீட்டுக்கும் வயலண்ட்டாகக் கோபம் கொள்ளாமல், நல்லபிள்ளையாகப் பொறுமையாக பதில் அளித்தது ஏர்டெல். அதில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.... 


இந்த லிஸ்டில் ‘விக்ரம் வேதா’ இசையமைப்பாளர் சாம்.சி.எஸ். உட்பட பலரும் அடக்கம்..