மார்வெல் படங்கள் வெளியாகுது என்றாலே வயது வரம்பின்றி ரசிகர்கள் படத்தை எதிர்பார்த்து காத்திருப்பாங்க. காரணம் நம் எல்லோருக்குள்ளும் இருக்கும் அந்த ஃபேண்டஸி மீதான ஈடுபாடுதான். சூப்பர் ஹீரோ அழிவின் விழிம்பில் இருக்கும் உலகத்தை காப்பற்றும் வழக்கமான கதையாக இருந்தாலும். அதற்காக உருவாக்கப்படும் கதாபாத்திரங்களும் அதற்கான மெனக்கடல்களும்தான் ரசிகர்களை வெகுவாக ஈர்க்க காரணம். அந்த வகையில் விரைவில் இந்தியாவிற்கு வரவிருக்கும் மார்வெல் திரைப்படங்கள் குறித்த அப்டேட்டை காணலாம்.



1.Eternals



அண்வெஞ்சர் மற்றும் ஆக்‌ஷன் நிறைந்த கதைக்களத்துடன்  .  Eternals  உருவாக்கப்பட்டிருக்கு. வழக்கம் போல இதுவும் காமிக்ஸ் நாவலை தழுவிதான் எடுக்கப்பட்டுள்ளது.  தினா, இக்ரிஸ், பிளாக் நைட் , செர்ஸி உள்ளிட்ட கதாபாத்திரங்கள்  Eternals படத்தின் முக்கியமான கதாபாத்திரமாக  பார்க்கப்படுகிறது. தினா கதாபாத்திரத்தில் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை கொண்ட ஏஞ்சலினா ஜோலி நடித்துள்ளார்.இந்த திரைப்படம் 200 மில்லியன் பட்ஜெட்டின் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தை  Chloé Zhao இயக்கியுள்ளார். இந்த படம் வருகிற நவம்பர் 5 ஆம் தேதி வெளியாவுள்ளது. 



2.Doctor Strange in the Multiverse of Madness


இந்த படத்தில் Sam Raimi, Elizabeth Olsen. Wanda Maximoff,  Benedict Cumberbatch உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில்  Benedict Cumberbatch  டாக்டர் ஸ்ட்ரேன்ஜாக நடித்துள்ளார். அவர் நிகழ்த்தும் சாகசங்களின் தொகுப்புதான் படம் . இது முந்தைய பாகத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. மார்வெல் படத்தை தயாரிக்க Sam Raimi இப்படத்தை இயக்கியுள்ளார் . படம் அடுத்த ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி இந்தியாவில் வெளியாவுள்ளது.




3.Thor: Love and Thunder



Chris Hemsworth அசத்தியிருந்த Thor படத்தின் முந்தைய பாகங்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது , அந்த வகையில் முதல் பாகங்களின் தொடர்ச்சியாக உருவாகியுள்ளது Thor: Love and Thunder. அட்வன்ஜர் மற்றும் ஃபேண்டஸி கதைக்களம் கொண்ட இந்த படத்தை இயக்கியுள்ளார் Taika Waititi. படம் அடுத்த ஆண்டு  மார்ச் 6 ஆம் தேதி இந்தியாவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




4.Black Panther: Wakanda Forever


மறைந்த இளம் நடிகர் Chadwick Boseman நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி வசூல் சாதனை படைத்த திரைப்படம்தான் .Black Panther. அந்த படத்தின் தொடர்ச்சியாகத்தான் Black Panther: Wakanda Forever திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. Tenoch Huerta , Letitia Wright ,Daniel Kaluuya உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாகசங்கள் நிறைந்த சூப்பர் ஹீரோ படமாக உருவாகியுள்ள இந்த படத்தை  Ryan Coogler இயக்கியுள்ளார். படம் அடுத்த ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது.




5.Blade


1998  ஆம் ஆண்டு  முதன் முறையாக  Blade படம் வெளியானது. அதன்  தொடர்ச்சியாக அடுத்தடுத்து இரண்டு பாகங்கள் வெளியாகின. மொத்தம் மூன்று பாகமாக வெளியான  Blade படத்தில்   Wesley Snipes ஹீரோவாக நடித்திருந்தார்.  ஆக்‌ஷன் ஹாரர் கதைக்களத்துடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. Blade மார்வெல் காமிக்ஸில் இடம்பெற்ற ஒரு கதாபாத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தற்போது ரீபூட் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது , புதிய படத்தில் Mahershala Ali கதாநாயகனான  Blade படத்தின் நடித்துள்ளார்.படம் அடுத்த மாதம் அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.




6.The Marvels


Nia DaCosta  என்ற பெண் இயக்குநர் படைப்பில் உருவாகி வரும் திரைப்படம்தான் The Marvels. இந்த படம் மார்வெல் தயாரிப்பில் வெளியான சூப்பர் ஹீரோக்களை வைத்து உருவாக்கியுள்ளனர். இந்த படம் மூலம் பலரின் ஃபேவெரைட் சூப்பர் ஹீரோக்களை ஒன்றாக திரையில் காண முடியும். Captain Marvel,Ms. Marvel மற்றும் Monica Rambeau. உள்ளிட்ட கதாபாத்திரங்கள் இப்படத்தில் இடம்பெறும் என தெரிகிறது.படம் அடுத்த வருடம் நவம்பர் 22 ஆம் தேதி இந்தியாவில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான மார்வெல் தெரிவித்துள்ளது.