2017-ம் ஆண்டு தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஒளிபரப்பி வந்தது விஜய் டிவி. இந்த ஆண்டு கரோனா அச்சுறுத்தலால் அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்புதான் பிக் பாஸ் 5-வது சீசனுக்கான விளம்பரம் வெளியானது. அக்டோபர் 3 முதல் பிக் பாஸ் சீசன் - 5 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது. இந்த 5 சீசனுக்கும் கமல்தான் தொகுப்பாளர். இந்த ஆண்டும் பிக் பாஸ் போட்டியாளர்கள் குறித்துப் பலருடைய பெயர்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வந்தன. வழக்கமாக 16 போட்டியாளர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். அடுத்தடுத்து வைல்டு கார்ட் என்ட்ரி என சில போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வார்கள். ஆனால் இம்முறை ஆரம்பத்திலேயே பிக்பாஸ் வீட்டுக்குள் 18 போட்டியாளர்கள் என்ட்ரி கொடுத்துள்ளனர். நிகழ்ச்சி ஒளிபரப்பின் மூலம் அதிகாரப்பூர்வமாக பிக்பாஸ் 5 இல் உள்ளே சென்றிருப்பவர்கள் குறித்து பார்க்கலாம்.
கானா இசைவாணி
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக கானா பாடகியான இசைவானி பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார். உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக இசைவாணியை தேர்வு செய்து பெருமைப் படுத்தியது BBC. பெண்கள் கால்பதிக்கத் தயங்கும் கானா இசைத்துறையில் சிறந்து விளங்கி வருவதற்காக இந்த அங்கீகாரம் அவருக்குக் கிடைத்தது. இந்தியாவில் இருந்து இப்பட்டியலில் இடம்பிடித்த ஒரே பெண் இசைவாணி தான்.
தாமரை செல்வி
நாடக கலைஞராக இருக்கும் இவர் பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்பு முத்து சிற்பி பாட, தாமரை செல்வி நடனமாடினார்.நான் கிட்டத்திட்ட 22 வருஷமா இந்த துறையில் இருக்கேன். என்னுடைய குழந்தைகளோட என்னால் இருக்கவே முடியாது. காலையில 5 மணிக்கு போயிட்டு மறுநாள் 11 மணிக்கு தான் வருவேன் என்று கூத்து கலைஞர்களின் கஷ்டத்தை பகிர்ந்துக்கொண்டார்.
சின்னப்பொண்ணு
இதையடுத்து பிக் பாஸ் போட்டியாளராக நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு அறிமுகப்படுத்தப்பட்டார். அப்போது அவர் தான் கடந்து வந்த கடினமான நாட்களை நினைவுக்கூர்ந்தார். கொரோனா சூழலால் மற்ற கலைஞர்களைப் போல தானும் பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். திரை பாடல்கள் மற்றும் ஆல்பம் பாடல்கள் உள்ளிட்ட பல நாட்டுப்புற பாடல்கள் பாடியுள்ளார்.
சிபி சந்திரன்
நான் நல்ல சம்பளம் வர வேலைய விட்டுட்டு சினிமாவில் நுழைந்தேன். மாஸ்டர் படம் இல்லன்னா நான் என்ன ஆயிருப்பேன்னு எனக்கு தெரியல. ஒரு விஷயத்த செய்றத்துக்கு முன்னாடி பல தடவை யோசிப்பேன், ஆனால் செய்ய ஆரம்பித்த பின்பு யோசிக்கமாட்டேன் என்று சிபி கூறினார்.
ராஜு ஜெயமோகன்
திருநெல்வேலியை சேர்ந்த இவர் பாக்கியராஜிடம் உதவி இயக்குநராக வேலை செய்துள்ளார். இவர் முதல் சீரியல் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை சீரியல் ஆகும்.இதனை தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் ராஜு. பிக்பாஸ் சீசன் 3யில் பங்கேற்ற நடிகர் கவினின் நண்பரான ராஜு படங்களிலும் நடித்து வருகிறார்.
வருண்
நடிகர் ஐசரி வேலனின் பேரனும், தொழிலதிபர் ஐசரி கணேசின் மருமகன் தான் நடிகர் வருண். ஏ.எல் விஜய்யுடன் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். இவர், தளபதி விஜய்யின் மெகா ஹிட் திரைப்படமான தலைவாவில் விஜய்யின் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அபினய் வட்டி
அபினய் பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசன் மற்றும் சாவித்ரியின் பேரன் ஆவார். இவர் நடிகர், விவசாயி, டென்னிஸ் பிளேயர் என பல முகங்களை கொண்டுள்ளார். தமிழில் ராமானுஜம், சென்னை28 2, விளம்பரம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
ஐக்கி பெர்ரி
தமிழ் ரேப் இசைக்கலைஞர் ஐக்கி பெர்ரி போட்டியாளராக களமிறக்கப்பட்டார். தஞ்சையை சேர்ந்த ஐக்கி, தான் ஒரு விவசாயக் குடும்பத்துப் பெண் என்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகக் கூறினார். மருத்துவரான இவர், இசை மீது கொண்ட காதலால், இண்டிபெண்டென்ட் ரேப் பாடகராகவும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
பாவனி
23வயதில் கல்யாணம் பண்ணிக்கணும் என்று ஆசை இருந்தது. எல்லாமே நல்லா போயிட்டு இருந்துச்சு, திடீரென எனது கணவன் தற்கொலை பண்ணிடாங்க.எனக்கு கல்யாண வாழ்க்கை நல்ல அமையல என்று வருத்தமாக பகிர்ந்துக்கொண்டார். இவர் ஒரு சீரியல் நடிகை.
சினிமாபையன் அபிஷேக் ராஜா
Fully Filmy எனும் யூடியூப் சேனலில் விமர்சகராக இருந்து பிரபலமான இவர், அதன் பிறகு ஓப்பன் பண்ணா எனும் யூடியூப் சேனலை தொடங்கி தமிழ் சினிமா விமர்சனங்களை கூறி வந்தார். மேலும், பல பிரபலங்களை பேட்டி எடுத்தும் பிரபலமானவர் அபிஷேக் ராஜா. இமைக்கா நொடிகள் படத்தில் ராஷி கன்னாவின் பாய் பெஸ்டியாக நடித்தவர்தான் இந்த அபிஷேக் ராஜா.
நதியா சங்
இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளது.நான் 14வது வயதிலிருந்து வேலை செய்கிறேன். என்னுடைய பில்லரே எனது கணவர் தான் என்று பகிர்ந்துக்கொண்டார் நதியா சாங் பகிர்ந்துக்கொண்டார். இவர் ஒரு மலேசிய மாடல்.
நமிதா மாரிமுத்து
தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக திருநங்கை போட்டியாளராக நமிதா பங்கேற்றுள்ளார். சென்னையை திருநங்கை மாடல் அழகி நமிதா மாரிமுத்து பல்வேறு அழகிப்போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.
சுருதி ஜெயதேவன்
இவர் ஒரு பேஸ்கெட் பால் வீராங்கனை ஆவார். சென்னையில் பிறந்து வளர்ந்த அக்ஷரா ரெட்டி 2019ம் ஆண்டு இந்தியளவிலான மிஸ் சூப்பர் குளோப் மற்றும் உலகளவிலான மிஸ் சூப்பர் குளோப் அழகிப் பட்டத்தை வென்றுள்ளார். காசு மேல காசு எனும் மலேசிய திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள இவர், ஹேப்பி நியூ இயர் எனும் தமிழ் குறும்படத்திலும் நடித்துள்ளார். சினிமா, சின்னத்திரை, மாடலிங் என கலக்கிய அக்ஷரா ரெட்டி தற்போது பாக்ஸிங் பயிற்சியை தீவிரமாக கற்றுக் கொண்டு வருகிறார்.
மதுமிதா
இலங்கை தமிழ் பெண்ணான மதுமிதா, பிறந்து வளர்ந்ததெல்லாம் ஜெர்மனியில்தான்.
ஜெர்மனியில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் மதுமிதாவுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட கால ஆசை. மாடலாகவும் பணி புரிந்து வரும் இவர் ஃபேஷன் டிசைனராகவும் உள்ளார். நடிப்புத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார் மதுமிதா.
பிரியங்கா தேஷ்பாண்டே
பிரியங்கா விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூஸிக் உட்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். நகைச்சுவையாகவும் சுவாரசியமாகவும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரியங்காவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இமான் அண்ணாச்சி
‘சொல்லுங்கண்ணே சொல்லுங்க’ என்ற வார்த்தையின் மூலம் தமிழக மக்களின் மத்தியில் இடம் பிடித்தவர். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் மட்டுமில்லாமல் நகைச்சுவை நடிகரும் ஆவார். இவர் சென்னை காதல், தலைநகரம், வேட்டைக்காரன், நையாண்டி, கயல், மெட்ராஸ், பூஜை, புலி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.
நிரூப் நந்தகுமார்
ஸ்ட்டார்ட் அப் கம்பெனி நடத்தி வரும் நிரூப் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். ஆறடி உயரம், தலை நிறைய முடி என அட்டகாசமாய் உள்ளார் நிருப். நான் அடுத்தவங்களுக்காக எதாவது பண்ணனும்னு நினைச்சேன். பிக்பாஸ்னால என்னால மாற்றத்த கொண்டு வர முடியும் என்று நினைக்கிறேன் என்று சிபி பகிர்ந்துக்கொண்டார்.
அக்ஷரா
அக்ஷரா ரெட்டி பிரபல மாடல் ஆவார். இவர் துபாயில் நடைபெற்ற மிஸ் குளோப் 2019 அழகிப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து வில்லா டூ வில்லேஜ் என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றுள்ளார்.