வாட்ஸ்-அப்..
உலகம் முழுக்க பரவலாக பயன்படுத்தப்படும் தகவல் பரிமாற்ற ஆப் வாட்ஸ்-அப் . பிரபல மேட்டா (ஃபேஸ்புக் ) நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்-அப்தான் அதிக பயனாளர்களை கொண்ட குறுஞ்செய்தி அனுப்பும் தொழில்நுட்பமாக தற்போது உள்ளது. டெக்ஸ்ட் மெசேஜ் மட்டுமே அனுப்பும் வகையில் அறிமுகமான வாட்ஸப் இன்று பல அப்டேட்களுக்கு பிறகு மாற்றங்களையும் வசதிகளையும் கொண்டுள்ளது.
பல்வேறு தகவல் பரிமாற்றத்துக்கு அச்சாணியாக இருப்பதால் அரசின் கண்காணிப்பிலும் இந்த செயலி உள்ளது. செய்தி என்ற பெயரில் வதந்திகள் பரப்பப்படுவதாகவும் இதனை தடுக்க வேண்டுமென்றும் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதன்படி வாட்ஸ் அப்பும் தங்கள் கொள்ளைகளின்படி சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
Flipkart இல் இன்று வெளியாகும் Dizo Watch 2 Sports ! என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம் !
முடக்கம்..
இந்நிலையில் வாட்ஸ் அப் கொள்கைக்கு எதிராக செயல்பட்ட 18,58,000 கணக்குகளை அதிரடியாக முடக்கியுள்ளது வாட்ஸ் அப். அது தொடர்பான விவரங்களையும் வெளியிட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள், 2021 இன் விதி 4(1)(d) இன் கீழ் தனது மாதாந்திர அறிக்கையை வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது. ஜனவரி 1 2022 முதல் ஜனவரி 31 2022 வரையிலான காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. அந்த தகவலின்படி இந்தியாவில் 18,58,000 கணக்குகளை வாட்ஸ் அப் முடக்கியுள்ளது.
+91 என்று தொடங்கும் எண்கள் என்பதால் இவை இந்திய எண்கள் என உறுதியாகியுள்ளன. வாட்ஸ் அப் பாலிசிக்கு எதிராக இயங்கியதாகவும், தொடர் குற்றச்சாட்டுகள் வந்த எண்களையும் கணக்கிட்டு 18,58,000 கணக்குகளை வாட்ஸ் அப் முடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசும் வாட்ஸ் அப்புக்கு ஒரு பாலிசியை உருவாக்கிக் கொடுத்துள்ளது. அதனை மீறும் பயனர்கள் அக்கவுண்ட் முடக்கப்படும் என்பது ஏற்கெனவே கொடுக்கப்பட்ட எச்சரிக்கையாகும். அதன்படியே தற்போது கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்