பட்ஜெட் பிரியர்களை கவரும் வகையில் ஸ்மார்ட் வாட்சுகளை அறிமுகப்படுத்தி வருகிறது  Dizo நிறுவனம். இது பிரபல Realme TechLife பார்ட்னருடன் இணைந்து தனது ஸ்மார்ட் வாட்சுகளை சந்தைப்படுத்துகிறது. அந்த வகையில் சமீப காலமாக கிசுகிசுக்கப்பட்ட   Dizo ஸ்மார்ட் வாட்ச்சின் அடுத்த பதிப்பான Dizo Watch 2 Sports இந்தியாவில் இன்று (மார்ச் 2 )ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.  இது குறித்த அறிவிப்பை டிஸோ நிறுவனம் நேற்று வெளியிட்டிருந்தது.  இந்த ஸ்மார்ட்வாட்சானது Flipkart வழியாக  இன்னும் சற்று நேரத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது. டிசோ வாட்ச் 2 ஸ்போர்ட்ஸ் அதன் முன்னோடியை விட 20 சதவீதம் இலகுவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. வசதிகளை பொருத்தவரையில்  1.69 இன்ச் டச் ஸ்கிரீன் வசதிகளுடன்  240x280 pixels  குவாலிட்டி மற்றும்  600 nits  இரவில் ஒளிரும் தன்மையுடன் அறிமுகமாகவுள்ளது.110 க்கும் மேற்பட்ட இண்டோர் மற்றும் அவுட்டோர் விளையாட்டுகளை ஆதரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் 150 க்கும் மேற்பட்ட watch faces இந்த ஸ்மார்ட்வாட்சில் இருக்கிறது.







Dizo Watch 2 Sports இல்  இதய துடிப்பு கண்காணிப்பு, SpO2 அளவீடு, தூக்க கண்காணிப்பு, பெண்களின் ஆரோக்கிய கண்காணிப்பு மற்றும் அத்தியாவசிய நினைவூட்டல் போன்றவை இருக்கிறது. வாட்டர் ப்ரூஃபுடன் வரும்  Dizo Watch 2 Sports  ஆனது 5ATM நீர்-எதிர்ப்பு மதிப்பீட்டுடன்  களமிறங்குவதாக கூறப்படுகிறது. அதாவது 50 மீட்டர் தண்ணீருக்கு கீழே 30 நிமிடங்கள் வாட்சினை பயன்படுத்த முடியும். Dizo Watch 2 Sports இன்று (மார்ச் 2) ஆம் தேதி மதியம் 12 மணிக்கு கிளாசிக் பிளாக், டார்க் கிரீன், கோல்டன் பிங்க், ஓஷன் ப்ளூ, பேஷன் ரெட் மற்றும் சில்வர் கிரே வண்ணங்களில் அறிமுகமாகவுள்ளது. இந்த வாட்ச் முதற்கட்டமாக  ஃபிளிப்கார்ட் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில  கடைகளில் விற்பனையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.