வாட்ஸ் அப் மெசேஜ்களில் தேவையாவற்றை எளிதாக தேடுவதற்காக ‘ஃபில்டர்ஸ்’ என்பதை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது.


வாட்ஸ் அப்:


 மெசேஜ் செய்வதற்கான செயலியாக இருந்த வாட்ஸ்-அப் தொழில், வேலை உள்ளிட்டவற்றிற்கும் பயன்படும் அளவிற்கு அதன் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. பயனர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அவ்வபோது பல்வேறு அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ஒரு புதிய அப்டேட் வந்துள்ளது. 


ஃபில்டர் வசதி


வாட்ஸ் அப் மெசேஜ்களில் இன்பாக்ஸ் முழுவதும் தேவையான மெசேஜ்கள், பைல்களை தேட புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, எதாவது மெசேஜ்களை தேட வேண்டும் என்றால் இனி எளிதாக தேடலாம். நியூ பில்டர்ஸ் அம்சத்தில் All, Unread மற்றும் Group, ஃபோட்டோஸ், வீடியோ, லிங்க்ஸ், ஜிஃப், ஆடியோ, டாக்குமென்ட், Polls போன்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும்.


தனிப்பட்ட இன்பாக்ஸில் அனுப்பப்பட்ட ஃபோட்டோகள், வீடியோ, லிங்க் போன்றவற்றை ‘சர்ச்’ செய்து காணலாம். ஆனால், இனி மொத்த வாட்ஸ் அப் -லும் மேலே கொடுக்கப்பட்டுள்ள ‘சர்ச்’ டேபில் தேவையான்வற்றை டைப் செய்தால் மொத்த டேட்டாவும் கிடைத்துவிடும். இதன் மூலம் தனித்தனியாக மெசேஜ்களை படிக்கலாம். வாட்ஸ்அப் ஹோம் ஸ்கிரின் பக்கத்தில் இந்த அம்சம் இடம்பெறுகிறது. தற்போது படிப்படியாக இந்த அம்சம் அனைவருக்கும் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. 





உதாரணமாக ‘Unread' என்பதை க்ளிக் செய்தால் நீங்கள் படிக்காமல் / ஓபன் பண்ணாத மெசேக் விண்டோக்களை எடுத்து கொடுத்துவிடும். ‘Photos' என்று டைப் செய்தால் மொத்த வாட்ஸ் அப்-ல் உள்ள ஃபோட்டோக்களை காண்பிக்கும். ஃபில்டர் செய்து தேவையானவற்றை வழங்கும் இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும் என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. 


" ஃபில்டர்ஸ் பயனாளிகளுக்கு மெசேஜ்களை ஆர்கனைஸ் செய்ய உதவும். மிக முக்கியமான உரையாடல்களைக் கண்டறிவதோடு, வாட்ஸ் அப் பயன்பாட்டை மிகவும் எளிதாக பயன்படுத்தவும் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். மிகவும் முக்கியமானவற்றில் கவனம் செலுத்த உங்களுக்கு உதவ, நாங்கள் தொடர்ந்து கூடுதல் அம்சங்களை உருவாக்குவோம்," என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.


WABetaInfo இன் படி, WhatsApp "Contacts" போன்ற ஃபில்டர்களையும் வடிவமைத்து வருகிறது. இது மக்கள் தங்கள் கான்டெக்ட்களில் சேமித்துள்ள மொபைல் எண்களில் இருந்து பெறப்பட்ட மெசேஜ்களைப் பார்க்கவும் அவற்றில் ‘Favorite' என்று டேக் செய்யவும் வழிவகுக்கும். ’பிடித்தவை’ என்ற ஃபில்டரும் விரைவில் அறிமுகமாகலம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமில் உள்ளதைப் போலவே பல்வேறு வசதிகளை வாட்ஸ் அப் பயனர்களுக்கும் வழங்கி வருகிறது. அதன்படி, இன்ஸ்டாகிராமில் இருப்பது போன்று  ஸ்டோரியில் ஒருவரை மென்ஷன் செய்வது போல,வாட்ஸ் அப் ஸ்டேடஸ்களிலும் விருப்பமானவரை மென்ஷன் செய்யும் வசதி அறிமுகமாக இருக்கிறது. இதிலும் உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு மட்டும் தெரியும்படி செய்யலாம். குறிப்பிட்ட நபரை மென்ஷன் செய்து ஸ்டேட்ஸ் வைக்கும்போது Notification சம்பந்தப்பட்ட நபருக்கு செல்லும். எனினும், இதற்காக Privacy விதிகளும் இருக்கும் என்று கூறப்படுகிறது. 


  மூன்றுக்கு மேற்பட்ட சாட்களை பின் (Pin) செய்து வைத்துக் கொள்ளும் வசதி விரைவில் அறிமுகமாகும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.