வாட்ஸ்அப்


உலகின் நம்பர் ஒன் செயலியான வாட்ஸ் அப் பல புதிய மற்றும் சுவாரசியமான அம்சங்களுடன் பல அப்டேட்டை அறிமுகப்படுத்தவுள்ளது. அந்த வகையில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் ஆடியோவை வைக்கும் வசதி , அனுப்பிய செய்தியை அழிப்பதற்கான நேர  அவகாசம் உள்ளிட்ட பல வசதிகளை சோதனை செய்துக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் disappearing messages ஐ மீட்டெடுக்கும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.







புதிய வசதி :


மறைந்த செய்திகளை மீண்டும் பார்க்கும் வசதியை வாட்ஸப் தற்போது சோதனை செய்து வருவதாக பிரபல WABetaInfo தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் பயனாளர் அனுப்பிய disappearing messages ஐ  chat info   பக்கத்தில் உள்ள  'Kept messages' என்னும் புதிய வசதி மூலம் மீட்டெடுக்க முடியும் . இதனை முக்கிய செய்திகளாக ஸ்டார் செய்து வைத்துக்கொள்ள முடியாது என்பது கூடுதல் தகவல். இது குழு சாட்டிற்கும் பொறுந்தும். ஆனால் வாட்ஸப் குழுவின் அட்மின் அதனை கட்டுப்படுத்துவதற்காக வசதிகளை வைத்திருப்பார்ர். இந்த வசதி தற்போது சோதனையில் மட்டுமே உள்ளது. WhatsApp டெஸ்க்டாப் பீட்டாவின் எதிர்கால அப்டேட்டில் மறைந்து போகும் செய்திகளை மேம்படுத்துவதால் இந்த புதிய வசதியிலும் வாட்ஸ் அப் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. 







‘Delete for Everyone’ :


வாட்ஸப்பில் அறிமுகமான ‘Delete for Everyone’  என்னும் வசதி பலரின் வரவேற்பை பெற்றது . இதன் மூலம் தவறுதலாக நாம் அனுப்பும் குறுஞ்செய்திகளை அழிக்க முடியும்.  ‘Delete for Everyone’  அம்சத்திற்கான காலக்கெடுவை நீட்டிக்க நிறுவனம் சோதனையில் ஈடுபட்டிருந்தாக ஆன்லைன் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிய வந்தது. இந்த நிலையில் ​​​​நிறுவனம் சில பீட்டா பயனர்களுக்கு இந்த அம்சத்தை வெளியிடத் தொடங்கியுள்ளது. ஃபேஸ்புக்கிற்குச் சொந்தமான வாட்ஸ் அப் செயலியானது ‘Delete for Everyone’  வசதிக்கு ஒரு மணிநேரம், எட்டு நிமிடங்கள் மற்றும் 16 வினாடிகள் காலக்கெடு வைத்திருக்கிறது. இதன் மூலம் குறிப்பிட்ட நேரத்திற்குள் அனுப்பிய செய்தியை அழித்துவிடலாம். இந்த வரம்பிற்குப் பதிலாக Delete for Everyone’  அம்சத்தின் கால வரம்பை இரண்டு நாட்கள் மற்றும் 12 மணிநேரமாக அதிகரிக்கச் செய்யும் பணியில்  WhatsApp ஈடுபட்டுள்ளது. முதற்கட்டமாக  iOS  பீட்டா பயனாளர்களுக்கு இந்த வசதி அறிமுகமாகியிருப்பதாக  கூறப்படுகிறது.