தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு இன்று நடைபெற்று முடிந்தது. காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேர்வு, மதியம் 12.30 மணி வரை 3 மணி நேரம் நடைபெற்றது. தேர்வர்கள் 12.45 மணி வரையில் தேர்வு மையத்தில் இருந்தனர்.


கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளுக்காக இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு மொத்தமுள்ள 7,382 காலி இடங்களை நிரப்பும் வகையில் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்காக டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இல்லாத வகையில் 21,85,328 பேர் விண்ணப்பித்தனர். இதற்கு முன்னதாக 2017-ம் ஆண்டில் 20.76 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த முறை விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 21.5 லட்சத்தைக் கடந்தது. இதில், பெண்களே அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்தனர்.


கிட்டத்தட்ட 22 லட்சம் பேர் விண்ணப்பம் செய்தாலும் 80 சதவீதம் பேர், அதாவது 18.5 லட்சம் மாணவர்கள் மட்டுமே தேர்வை எழுதியதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்தது. அதேபோல், எழுதிய 18 லட்சம் பேரில் குறைந்தது 6 லட்சம் பேர் இந்த தேர்வுக்காக தீவிரமாக படித்து எழுதி இருப்பார்கள் என்று கணிக்கப்படுகிறது. மீதமுள்ள அனைவரும் தேர்வு நடக்கும் ஒரு நாள் முன்பு வரை வேலை பார்த்து, அடுத்த நாள் காலை விடிந்ததும் தேர்வு மையத்தை நோக்கி நடையை கட்டி இருப்பார்கள். ஒரு சிலர் குரூப் 4 தேர்வுக்கு எந்த வகை பால் பாய்ண்ட் பேனா கொண்டு போக வேண்டும் என்பது கூட தெரியமால் நீல நிற பால் பாய்ண்ட் பேனாவை கொண்டு போன கூத்தும் அரங்கேறியுள்ளது. 


அப்படி இருக்க, நேற்று முதல் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் குரூப் 4 பற்றியே நகைச்சுவை மீம்ஸ்கள் இணையத்தில் கலக்கி வருகிறது. அவை பின்வருமாறு :






































மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண