சோஷியல் மீடியா நிறுவனமான பேஸ்புக் தனது துணை நிறுவனங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்சப்பில் அண்மைக்காலமாக பல புதிய அப்டேட்களைக் கொண்டுவந்தபடி உள்ளது. வாட்சப்பில் அடுத்தடுத்து பல அப்டேட்கள் வந்துகொண்டிருப்பதற்கு இடையே இன்ஸ்டாகிராமிலும் சில குட்டிக் குட்டி மாற்றங்களை அரசு கொண்டுவந்தபடி உள்ளது.
இதில் தற்போது புதிதாக இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் தொடங்கும் நபர்களுக்கு வீடியோ வெரிஃபிகேஷன் முறையை இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முறை கடந்த ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் அதில் சில குளறுபடி ஏற்பட்டதால் அது திரும்பப் பெறப்பட்டது. இந்த முறை தற்போது மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறைப்படி புதிதாக இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்குபவர்கள் செல்ஃபி வீடியோ முறை வழியாகத் தங்களது முகத்தை வெரிஃபை செய்ய வேண்டும்.
இதில் சுவாரசியம் என்னவென்றால் அண்மையில் பார்பி முகத்தை வைத்து ஒருவர் இந்த வீடியோ செல்பியை வெரிஃபை செய்துள்ளார். அந்த செல்ஃபியும் பாஸாகியுள்ளது என்பதுதான். யூட்யூபர் அலெக்சாண்டர் சால்கிடிஸ் என்பவர் தனது யூட்யூபில் இந்த வீடியோவைப் பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோவில் ஒரு இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை உருவாக்குகிறார். அந்த அக்கவுண்ட்டில் வீடியோ வெரிஃபிக்கேஷன் கேட்கப்படுகிறது. தன்னிடம் இருக்கும் பார்பி டாலைக் கொண்டு அந்த செல்ஃபி வீடியோ கேமிரா முன்பு வைக்கிறார்.அந்த கேமிரா முகத்தை இடது பக்கமும் வலது பக்கமும் திருப்பச் சொல்கிறது. பார்பி பொம்மையின் இடது வலது பக்கத்தைத் திருப்புகிறார் இவர். முடிந்ததும் வெரிஃபைட் என பச்சை சிக்னல் காண்பிக்கிறது இன்ஸ்டாகிராம்.
இன்ஸ்டா ஃவெரிபிக்கெஷன் பார்பி பொம்மைக்கு ஓகே சொல்லியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அக்கவுண்ட் எவ்வளவு பாதுகாப்பானது என்கிற பதட்டத்தையும் பயனாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, சமூக ஊடக ஆலோசகர் மாட் நவரா பகிர்ந்துள்ள ஸ்கிரீன் ஷாட்களின்படி, இன்ஸ்டாகிராம் இப்போது அடையாள சரிபார்ப்புக்காக வீடியோ செல்ஃபிகளைக் கேட்கத் தொடங்கியுள்ளது. சமூக ஊடக தளத்தில் போலி சுயவிவரங்கள் மற்றும் ஸ்பேம் கணக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட பயனர் உண்மையான நபரா இல்லையா என்பதைப் புரிந்துகொள்ள புதிய அடையாளச் சரிபார்ப்பு செயல்முறை Instagram-க்கு உதவும் என்பதை ஸ்கிரீன்ஷாட்கள் காட்டுகின்றன. உங்கள் தலையை வெவ்வேறு திசைகளில் திருப்புவதற்கான ஒரு சிறிய வீடியோவை மேடையில் கேட்கும்.இந்த வீடியோ செல்ஃபிகள் பின்தளத்தில் சேமிக்கப்படாது மேலும் 30 நாட்களில் நீக்கப்படும் என்று நிறுவனம் உறுதியளித்துள்ளது. “உங்கள் தலையை வெவ்வேறு திசைகளில் திருப்பும் ஒரு சிறிய வீடியோ எங்களுக்குத் தேவை. நீங்கள் ஒரு உண்மையான நபர் என்பதை உறுதிப்படுத்தவும், உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும் இது எங்களுக்கு உதவுகிறது.” என்று Instagram தெரிவித்துள்ளது. இது தவிர, Instagram இன் படி, நீங்கள் பதிவேற்றும் வீடியோ செல்ஃபிகள் ஒருபோதும் தளத்தில் காட்டப்படாது. பயோமெட்ரிக் தரவைச் சேகரிக்க மாட்டோம் அல்லது நிறுவனத்தின் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த மாட்டோம் என்று நிறுவனம் உறுதியளிக்கிறது என்பதையும் திரைக்காட்சிகள் காட்டுகின்றன.