இந்தியாவில் 5 ஜி அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. சென்னை , பெங்களூர் , மும்பை உள்ளிட்ட 13 பெரு நகரங்களில் முதற்கட்டமாக பயனாளர்கள் 5 ஜி சேவையை பெறுவார்கள். 5 ஜி சேவையை பெறுவதற்கு முதலில் உங்கள் சிம் கார்டிற்கு 5 ஜி தொழில்நுட்பம் இருக்க வேண்டும் , இரண்டாவது நீங்கள் 5 ஜி சேவையை அனுமதிக்கும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த வேண்டும். ஒருவேளை நீங்கள் ஸ்மாட்போன் வாங்க போகிறீர்கள் என்றால் 5ஜி சேவை இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம்.


 





5G ஆதரவு சிப்செட் இருக்கிறதா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள் : 


5G ஃபோனில் 5G-ஆதரவு சிப்செட் இருக்க வேண்டும். Qualcomm மற்றும் MediaTek போன்றவை 5G ஃபோன்களில் தங்கள் சிப்செட்களை வழங்குகின்றன. சில நேரங்களில் நீங்கள் 4ஜி ஆதரவை 5ஜி என நினைத்துக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. உதாரணமாக, ஸ்னாப்டிராகன் 480 என்பது 5ஜி சிப்செட் ஆகும், அதே சமயம் ஸ்னாப்டிராகன் 680 4ஜி ஆதரவு கொண்டது. இதேபோல், மீடியா டெக் அதன் பெரும்பாலான டைமன்சிட்டி சிப்செட் 5G ஆதரவை வழங்குகிறது.


5G பேண்டுகள் இந்தியாவில் வழங்கப்படுகின்றன:


இந்தியாவில் 5G நெட்வொர்க்குகளை  எந்த  ஃபோன் ஆதரிக்கும் என்பதை உறுதிப்படுத்தும் 5G பேண்டுகளின் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் அதனை பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் இணையதள பக்கங்களில் வெளியிடும் . எனவே உங்கள் ஸ்மார்ட்போன் 5ஜி பேண்டை ஆதரிக்குமா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள் .




அப்டேட்டை கவனியுங்கள் :


சில ஃபோன்கள் 5G தொழில்நுட்பத்தை ஆதரிக்கும்.  ஆனால் அவற்றை  இந்தியாவில் பயன்படுத்த  5G புதுப்பிப்பு தேவை.  ஏனென்றால் இந்தியாவில் இப்போதுதானே 5ஜி சேவை அறிமுகமாகியுள்ளது. எனவே அதனை பெற அப்டேட்டுகளை மொபைல் நிறுவனம் வழங்கும். ஆப்பிள், சாம்சங் மற்றும் கூகிள்  பிக்சல் ஆகியவை நாட்டில் இன்னும் 5ஜி சேவையை வழக்கவில்லை. ஆனால் அவற்றின் புதுப்பிப்புகள் வரும் மாதங்களில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.


பெரிய பேட்டரி அவசியம் :


5G ஆனது உங்கள் டேட்டா பேண்ட்வித் மற்றும் உங்கள் ஃபோனில் அதிக அளவு சார்ஜை எடுத்துக்கொள்ளும் . எனவே குறைந்தபட்சம் 5000mAh பேட்டரி திறன் கொண்ட ஒரு போனை நீங்கள் தேர்வு செய்வது மிக அவசியம். மேலும், வேகமான சார்ஜிங் ஆதரவை வழங்கும் ஃபோனை நீங்கள் வாங்க வேண்டும், அப்போதுதான் பேட்டரி ட்ரை ஆவதில் இருந்து உங்கள் மொபைலை பாதுகாக்க முடியும்.