கௌதம் வாசுதேவ் மேனன் - ஜி.வி பிரகாஷ் குமார் காம்போவில் உருவாகியுள்ள 13 படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற செல்ஃபி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் இப்படம் மூலம் இணைந்துள்ளது இந்த ஜோடி.  மெட்ராஸ் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் நந்தகோபால் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் விவேக் இயக்கியுள்ள இந்த ஹாரர் திரைப்படத்தின் மிரட்டலான டீசர் இன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 


 



 


நடிப்பின் மீது ஆர்வம் :


தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் முன்னணி இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இருவரும் தங்களது நடிப்பு திறமையையும் நிரூபித்து வருகிறார்கள். இப்படத்தில் கௌதம் மேனன் ஒரு போலீஸ் அதிகாரியாக வழக்கம் போல மிடுக்காக நடித்துள்ளார். 


 






 


மர்மமாக நகர்கிறது கதை : 


ஒரு இளைஞன் தனது நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும் போது தவறுதலாக ஒரு மர்மமான இடத்தில் சிக்கி கொள்கிறார்கள். அங்கு நடக்கும் மர்மமான சம்பவங்களை மிகவும் த்ரில்லிங்காக நகர்த்தியுள்ளார் இயக்குனர். என்ன நடக்கிறது என்பதை மிகவும் மர்மமாகவும் மிரட்டலாகவும் கொண்டு செல்வது தான் படத்தின் கதை. இந்த த்ரில்லர் திரைப்படம் நிச்சயம் ரசிகர்களின் வரவேற்பை பெரும் என்ற முழு நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் படக்குழுவினர். 


 






 


மிரட்ட வைக்கும் பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு:


13 திரைப்படத்தின் பின்னணி இசையை சிந்து குமாரும், ஒளிப்பதிவு பணிகளை சி.எம் மூவேந்தரும் மிக சிறப்பாக மேற்கொண்டுள்ளனர்.  மிகவும் குறைந்த நாட்களில் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.  படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.


செல்ஃபி திரைப்படத்தின் மூலம் வெற்றி பெற்ற கௌதம் வாசுதேவ் மேனன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி இப்படத்திலும் வரவேற்கப்படும். த்ரில்லர் படங்களுக்கு என்றுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும் என்பதால் நிச்சயமாக இப்படம் ரசிக்கப்படும்.