Just In





Prince Twitter Review: தீபாவளி ரேஸில் ஜெயித்தாரா சிவகார்த்திகேயன்..ப்ரின்ஸ் படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ..!
Prince Twitter Review Tamil: ப்ரின்ஸ் படம் சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கையில் முதல் தீபாவளி ரீலிசாக அமைந்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ப்ரின்ஸ் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் ட்விட்டரில் தங்கள் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் வரும் அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடை, பட்டாசு கொண்டாட்டங்களோடு அந்த தினத்தில் ரிலீசாகும் புதுப்படங்களை குடும்பத்துடன் தியேட்டரில் பார்த்தால் தான் ஒரு மகிழ்ச்சி கிடைக்கும். இதனால் ஒவ்வொரு பண்டிகை வரும் போது கூடவே என்னென்ன படங்கள் ரிலீசாகப் போகிறது என்ற எதிர்பார்ப்பு சாமானிய மக்களுக்கும் இருக்கும்.
அந்த வகையில் இந்த தீபாவளிக்கு இரண்டு புதிய படங்கள் ரிலீசாகியுள்ளது. ஒன்று சிவகார்த்திகேயன் நடித்த ப்ரின்ஸ், மற்றொன்று கார்த்தி நடித்த சர்தார். இவ்விரு படங்களும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ப்ரின்ஸ் படம் சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கையில் முதல் தீபாவளி ரீலிசாக அமைந்துள்ளது. தெலுங்கு திரைப்படமான ‘ஜாதி ரத்னாலு’ படத்தின் இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகை மரியா, நடிகர் சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள பிரின்ஸ் படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் உள்ளிட்டவை பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இன்று படம் ரிலீசாகியுள்ளது.
அனைத்து ஊர்களிலும் காலை 5 மணிக்கே முதல் காட்சி திரையிடப்பட்ட நிலையில் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சிலவற்றை கீழே காணலாம்.