உலக முழுவதும் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர்  தினம் கொண்டாடப்படுகிறது. அணையில் தேக்கி வைத்த தண்ணீரை வறண்ட காலங்களில் திறப்பது போல,  இந்த தினத்தில், பலரும் தங்களது மனதில் தேக்கி வைத்த காதலை திறந்து விடுவர் . சிலருக்கு காதல் கை கூடும், சிலருக்கு ஒருதலை காதலாகவே மாறும்.


மொழியில்லா காதல்:


காதலுக்கு மொழியில்லை,சாதியில்லை, மதமில்லை என்று கூறுவார்கள். அந்த காதலை கொண்டாடும் விதமாக பல்வேறு நிறுவனங்களும் ஆஃபர்களை வழங்கி வருகின்றனர். சில ஆடை நிறுவனங்கள் ஆடைகளுக்கு ஆஃபர்களையும், பரிசு பொருட்களை விற்பனை செய்யும் சில நிறுவனங்கள் தங்களது பரிசு பொருட்களுக்கு ஆஃபர்களையும் வாரி வழங்கி வருகின்றனர்.


இந்நிலையில், காதலர் தினத்தையொட்டி தொலைத்தொடர்பு நிறுவனமான வோடாஃபோன் – ஐடியா, தனது வாடிக்கையாளர்களுக்கு பல ஆஃபர்களை அறிவித்துள்ளன.


ஆஃபர்கள்: 


ரூ. 299 மற்றும் அதற்கு அதிகமான ரீசார்ஜ் வசதிகளில் 5 ஜிபி நெட்வொர் டேட்டா இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரூ. 199 மற்றும் ரூ. 299-க்கு வரையிலான ரீசார்ஜ் வசதிகளில் 2 ஜிபி நெட்வொர் டேட்டா இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், vi love tunes contest-ல் கலந்து கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் வரை பரிசு பொருட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலயில், இச்செய்தி காதலர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Also Read: Valentines Day 2023: 90ஸ் கிட்ஸ் ரெடியா இருங்க.. பழைய காதல் படங்களை திரையிடும் தியேட்டர்கள்.. லிஸ்ட் இதோ..!


Also Read: Promise Day 2023: காதல் கனவே.. உன்னை கைவிடமாட்டேன்.. காதல் வரிசையில் இது ஐந்தாம் நாள்.. இன்னைக்கு ப்ராமிஸ் டே...