வோடபோன் ஐடியா லிமிடெட் பிப்ரவரியில் 1.3 மில்லியன் 4ஜி பயனர்களை இழந்துள்ளது. மேலும் இது கடந்த 21 மாதங்களில் மிகக்கடுமையான சரிவு என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ள சமீபத்திய சந்தாதாரர் தரவுகள் தெரிவிக்கின்றன.


விஐ சரிவு


"பிப்ரவரி 2023 இல் ஏற்பட்டுள்ள VI-இன் 4G சந்தாதாரர்களின் சரிவு கடந்த 20 மாதங்களில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சரிவாகும், இதற்கு காரணம் பார்தி ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் 5G-யைக் கொண்டு வந்ததுதான்," என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களிலும் பொதுவாக குறைந்துள்ளது. ஆனால் முதன்மையாக மெட்ரோ மற்றும் ஏ-கிளாஸ் அல்லது அதிக வருவாய் ஈட்டும் வட்டங்களில், நிறுவனத்தின் பங்கு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.


5G சேவைகள் இல்லாததே வாடிக்கையாளர்கள் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவைத் தேர்ந்தெடுப்பதன் முக்கியக் காரணம் என்று தொழில் வல்லுநர்கள் தெரிவித்தனர். பார்தி ஏர்டெல் அல்லது ஜியோவிற்கு 'போர்ட்' செய்து வோடபோன் ஐடியாவில் இருந்து விலகிய பல பயனர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களும் அவ்வாறே கூறுகின்றனர். பெரும்பாலானோர் 5ஜி சேவை இல்லாததை காரணமாக தேர்ந்தெடுத்துள்ளனர். 



8 லட்சம் வாடிக்கையாளர்கள் குறைவு


"VI-க்கான சந்தாதாரர்களின் சந்தைப் பங்கு 16bps குறைந்து 20.8% ஆக உள்ளது, அதே நேரத்தில் பார்தி ஏர்டெல் மற்றும் RJio க்கு முறையே 32.4% (+12bps MoM) மற்றும் 37.4% (+12bps MoM) அளவுக்கு மேம்பட்டுள்ளது. கடந்த 12 மாதங்களில், வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் இழந்த வாடிக்கையாளர்களை 33% பார்தி ஏர்டெல் கவர்ந்துள்ளது" என்று மோர்கன் ஸ்டான்லி ஆராய்ச்சி ஆய்வாளர்கள் தெரிவித்தனர். செயலில் உள்ள VI இன் சந்தாதாரர்கள் எண்ணிக்கை பிப்ரவரியில் 8,00,000 குறைந்துள்ளது. அதே நேரத்தில் ஜியோ செயலில் உள்ள பயனர்களில் 20 அடிப்படை புள்ளிகளைப் பெற்று 38.7% ஆகவும், ஏர்டெல் அதன் சந்தைப் பங்கை 35.7% ஆகவும் தக்க வைத்துக் கொண்டது. VI நிறுவனம் 13 அடிப்படை புள்ளிகளை இழந்தது. 


தொடர்புடைய செய்திகள்: Karnataka Election Results 2023 LIVE: வீணாய்ப் போன வியூகம்; தென்னிந்தியாவில் இருந்து நடையைக் கட்டும் பாஜக! தகவல்கள் உடனுக்குடன்..!


ஏர்டெல் & ஜியோ


JM Financial இன் ஆய்வாளர்கள் செய்த ஆராய்ச்சியில், 2021 ஜூலை மற்றும் நவம்பரில் கட்டணத்தை உயர்தியதால், ஒரு பயனரிடமிருந்து வரும் குறைந்த சராசரி வருவாய் பிரச்சனைகள் வோடபோன் ஐடியாவிற்கு குறைந்ததாக கூறப்பட்டுள்ளது. செயலில் இருக்கும் சந்தாதாரர்களைச் சேர்ப்பதில் ஜியோ முன்னிலை வகிக்கிறது. 4G பயனர்களிடையே ஏர்டெலின் சந்தைப் பங்கு ஆதாயம் பெறுகிறது, அதற்கு காரணம் அவர்களது கட்டனம்தான். 3G/4G பயனர்களிடையே நிலையாக நிற்க வேண்டுமென்றால் ஏர்டெல் மற்றும் ஜியோ அவர்களது சேவையை அதிக கட்டணங்களுக்கு ஏற்றதாக வைத்திருக்க வேண்டும் என்று Jefferies ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.



நிதி திரட்டல் கால தாமதம்


"ஏர்டெல் மற்றும் ஜியோவின் சந்தைப் பங்குகள் Vi இன் வீழ்ச்சியால் உயரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், குறிப்பாக பிரீமியம் சந்தாதாரர்களிடையே, பான்-இந்தியா 5G வெளியீடுகள், Vi இன் நிதி திரட்டல் கால தாமதம் மற்றும் 5G வெளியீடு எப்போது என்பது தெரியாத நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றால் உந்தப்படும்" என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். நிலுவைத் தொகைக்கான வட்டியை ஈக்விட்டியாக மாற்றிய பிறகு, இப்போது VI இன் பங்குதாரராக இருக்கும் அரசாங்கம், மாதத்திற்குள் ஒரு மறுமலர்ச்சித் திட்டத்துடன் திரும்பி வரும் என்று எதிர்பார்க்கிறது என்று கூறப்பட்டது. ஆதித்ய பிர்லா குழுமத்தின் விளம்பரப்படுத்தப்பட்ட நிறுவனம் 2020 முதல் கடன் மற்றும் பங்கு மூலம் ₹20,000 கோடியை திரட்ட முயற்சித்து வருகிறது, ஆனால் அது மிகவும் காலதாமதம் ஆகி வருவதே இதற்கு காரணம்.