வாடிக்கையாளர்களை கவரும் வகையில், வோடஃபோன் ஐடியா ரூ. 499க்கு டபுள் டேட்டா சேவையினை அறிமுகப்படுத்தியுள்ளது. இதோடு மட்டுமின்றி நள்ளிரவு 12 மணிமுதல் காலை 6 மணிவரை இலவசமாக அதிவேகத்துடன் டேட்டா சேவையினை வழங்குகிறது.
கொரோனா காலத்தில் கடந்த ஓராண்டிற்கு மேலாக பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிவதற்கு அனுமதித்துள்ளனர். இந்நேரத்தில் சரியான டேட்டா சேவை இல்லாமல் பல பணியாளர்கள் அவதிப்பட்டு வரும் நிலையினைப் பார்க்கிறோம். இந்த சூழலை கருத்தில் கொண்டு ஏர்டெல், ஜியோ, வோடபோன் போன்ற நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் போட்டிபோட்டுக் கொண்டு அதிக டேட்டாக்களுடன் கூடிய மலிவான திட்டங்களை அறிமுகம் செய்துவருகிறது. அந்த வரிசையில் தற்போது வோடபோன் ஐடியா தங்களது வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய ப்ரீபெய்டு திட்டங்களில் பல்வேறு சலுகைகளை அறிமுகம் செய்துள்ளது. எனவே இந்நேரத்தில் வோடஃபோன் அறிவித்து புதிய ப்ரீபெய்டு திட்டங்கள் என்ன என்பதைப்பற்றி இங்கே பார்ப்போம்.
முதலில் வோடஃபோன் ஐடியாவில் ரூ.499 ப்ரீபெய்டு திட்டம்: 56 நாள்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கப்பெறுகிறது. இதோடு ஏற்கனவே வழங்கி வந்த 2 ஜிபி டேட்டாக்களுக்குப் பதிலாக 4 ஜிபி டேட்டாக்கள் தினமும் கிடைக்கப்பெறும் நிலையில் மொத்தம் 224 ஜிபி என்றாகவுள்ளது. மேலும் ஒரு வருட Zee ப்ரீமியத்துடன் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இலவச டேட்டாவினை பயனர்கள் பெறலாம். அதோடு மட்டுமின்றி, வீக்கென்ட் டேட்டா ரோல் ஓவரின் மூலம் சந்தாதாரர்கள், இந்த வாரத்தில் பயன்படுத்த முந்தைய வாரத்தில் இருந்து தங்கள் மீதமுள்ள டேட்டாவினைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
மேலும் ஏற்கனவே வோடஃபோன் ஐடியா ரூ.699 க்கு 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தில் 336 ஜிபி டேட்டா மற்றும் ரூ.299 ப்ரீபெய்டு திட்டத்தில் பயனர்களுக்கு Zee ப்ரீமியத்தினையும் வழங்கியது. இந்நிலையில் இவ்விரு ப்ரீபெய்டு திட்டங்களுக்கு வழங்கியது போல தற்போது ரூ.499 ப்ரீபெய்டு திட்டத்திலும் இந்த சலுகையினை வழங்கியுள்ளது. இந்த ப்ரீபெய்டு சலுகை நிச்சயம் வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருப்பதோடு, புதிய வாடிக்கையாளர்களையும் தங்கள் பக்கம் ஈர்க்கும் என்ற நம்பிக்கையில் இந்நிறுவனம் இத்திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. ஏற்கனவே வோடபோன் ஐடியா நிறுவனம் (Vi) கடந்த சில வாரங்களாக அதன் நிதி நிலைமை காரணமாக சில சறுக்கல்களை சந்தித்துவரும் ஒரு நிறுவனமாக மாறிப்போய் உள்ளது. இருப்பினும், நீங்கள் வோடஃபோன் ஐடியாவின் சந்தாதாரராக இருந்தால் தற்பொழுது அறிவித்துள்ள இத்திட்டத்தினைப்பெற்று பயன்பெற நல்ல வாய்ப்பாக இந்த ப்ரீபெய்டு திட்டம் அமைகிறது.