Apple to Android | ஆண்ட்ராய்ட் தளத்திற்கு மாறும் ஆப்பிள் பயனாளர்கள் - காரணம் என்ன?

ஆண்ட்ராய்ட் மற்றும் iOS இடையே நடக்கும் போர் என்பது முடிவில்லாத ஒன்றாக மாறியுள்ளது.

Continues below advertisement

இந்த டிஜிட்டல் யுகத்தில் உலக அளவில் நிலவி வரும் போட்டிகளில் ஆண்ட்ராய்ட் மற்றும் iOS இடையே நடக்கும் போர் என்பது முடிவில்லாத ஒன்றாக மாறியுள்ளது. குறிப்பாக கடந்த சில ஆண்டுகாலமாக அதிகரித்து வரும் செல்போன் பயன்பாடு இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. ஏறத்தாழ ஒரு மனிதனின் வாழ்க்கையில் எல்லாமே செல்போன் தான் என்ற நிலை தற்போது உருவாகி உள்ளது. இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டில் முதல் மற்றும் இரண்டாம் காலாண்டில் சுமார் 26 சதவிகித iOS பயனாளர்கள் ஆண்ட்ராய்ட் தளத்திற்கு மாறியுள்ளதாக சில தரவுகள் தெரிவிக்கின்றன.   

Continues below advertisement

வெளியிடப்பட்ட இந்த தரவுகள் அனைத்தும், ஆப்பிளின் சந்தை ஆராய்ச்சி குழுக்களிடமிருந்து பெறப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் தங்கள் பயனர்கள் எந்த அளவிற்கு தங்களுடைய நிறுவன பொருட்களை வாங்கியுள்ளனர் என்பதை புரிந்துகொள்ள ஆப்பிள் நடத்திய சந்தை ஆராய்ச்சியின் விளைவாக இந்த தரவு உள்ளது. 2019 ஆண்டு 3ம் காலாண்டில் 19 சதவிகித iOS பயனாளர்கள் ஆண்ட்ராய்ட் தளத்திற்கு மாறியுள்ளனர் என்றும், அதே போல 2019 ஆண்டு 4ம் காலாண்டில் 26 சதிவிகிதம், 2020ம் ஆண்டு முதல் காலாண்டில் 26 சதவிகிதம் மற்றும் இரண்டாம் காலாண்டில் 12 சதவிகிதம் iOS பயனாளர்கள் ஆண்ட்ராய்ட் தளத்திற்கு மாறியுள்ளனர்.


 

Redmi Note 10 Pro | மீண்டும் விலையேறியது ரெட்மி நோட் 10 ப்ரோ!

மேலும் இந்த தரவுகள் தரும் முடிவில், உலகத்தில் தற்போது நிலவும் இந்த அசாதாரண சூழலில் ஆப்பிள் நிறுவன பொருட்களின் விலையேற்றமும் இந்த மாற்றத்திற்கு மிக முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மேலும் இந்த மாற்றத்தின் பெரும்பகுதி ஐபோன் 12 ஐ அறிமுகப்படுத்துவதற்கு முன்பே காணப்பட்டது என்றும் தரவுகள் கூறுகின்றன. iOSஐ விட ஆண்ட்ராய்ட் விலை மலிவானது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கொரோனா காலகட்டத்தில் இந்திய சந்தையில் பல ஆண்ட்ராய்ட் போன்கள் குறிப்பாக பட்ஜெட் ஸ்மார்ட் போன்களின் வெளியிடும் விற்பனையும் அதிகரித்துள்ளதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவன பொருட்கள், குறிப்பாக ஆப்பிள் போன்கள் 30000 ரூபாயில் தொடங்கி 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான விலைக்கு விற்பனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement