ரெட்மி நோட் 10 ப்ரோ


கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட இந்த ஸ்மார்ட் போன் தற்போது 500 ரூபாய் விலையேற்றம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ரெட்மி நோட் 10 ப்ரோவைப் பொருத்தவரை, மூன்று வேரியன்டுகளில் வெவ்வேறு உள்ளமைவுகளில் கிடைக்கிறது. ஆனால் இந்த விலையேற்றம் என்பது ஒரு குறிப்பிட்ட வேரியன்டுக்கு மட்டுமே பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரெட்மி நோட் 10 ப்ரோவில் 6 ஜிபி RAM + 64 ஜிபி ஸ்டோரேஜ், 6 ஜிபி RAM + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி RAM + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய மூன்று வேரியன்டுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.




இதில் ரெட்மி நோட் 10 ப்ரோ 6 ஜிபி RAM + 64 ஜிபி ஸ்டோரேஜ் ரூ .15,999க்கும், 6 ஜிபி RAM + 128 ஜிபி ஸ்டோரேஜ்  ரூ .16,999 மற்றும் 8 ஜிபி RAM + 128 ஜிபி ஸ்டோரேஜுக்கு ரூ .18,999க்கும் விற்பனையாகி வந்தது. தற்போது விலையேற்றத்திற்கு பிறகு, 6 ​​ஜிபி + 128 ஜிபி மாடல் இப்போது ரூ .17,499 ரூபாய் அதாவது 500 ரூபாய் விலையுயர்வை பெற்று விற்பனையாகி ஆகி வருகின்றது. மேலும் மற்ற இரண்டு மாடல்களின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமேசான் மற்றும் ரெட்மி இணையதளங்களில் இந்த விலையேற்றம் அமலுக்கு வந்துள்ளது. 






ரெட்மி நோட் 10 ப்ரோ 5G


பிரபல சியோமி செல்போன் நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு தனது புதிய ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி மாடலை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த ஸ்மார்ட் போனின் பன்னாட்டு வெளியிட்டு குறித்து எந்த தகவலும் வெளிவராத நிலையில் போக்கோ ப்ராண்டில் இந்த போன் இந்திய சந்தையில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி வேரிஎண்ட்டில் உள்ளே அதே அம்சங்களோடு பிராண்ட் மட்டுமே மற்றம் செய்யப்பட்டு இந்த போன் வெளியாகவுள்ளது.  இந்திய சந்தையில் போக்கோ எக்ஸ் 3 ஜிடி என்ற பெயரில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.  


Tirumph Speed Twin | அடுத்த ப்ரீமியம் பைக்கை வெளியிட்ட டிரையம்ப் - மூன்று வண்ணங்கள் ஸ்பீட் ட்வின்
 
ரெட்மி நோட் 10 ப்ரோ 4ஜி வேரிஎண்ட் ஏற்கனவே இந்திய சந்தையில் கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது. 108 மெக் பிக்செல் மெயின் கேமெராவோடு கூடுதலாக 3 கேமரா கொண்டு இந்த போன் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிளாஸ்டிக் பிரேம் மற்றும் கிளாஸ் பின்புறம் கொண்ட இந்த ஸ்மார்ட் போன் 6.6 இன்ச் டிஸ்பிலே கொண்டு ஆண்ட்ராய்டு 11 தலத்தில் செயல்படுகிறது. இந்திய சந்தையில் 20,000 ரூபாய்க்கு விற்கப்படும் இதே போனின் 5ஜி வேர்சின் தான் தற்போது அறிமுகமாகி உள்ளது. 


இந்த கொரோனா காலகட்டத்தில் ரெட்மி நிறுவனம் பல ஸ்மார்ட் போன்களை தொடர்ந்து வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.