மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மூலம் 6 ஆண்டுகளுக்குப்பிறகு விண்டோஸ் இயங்குதளத்தின் (windows Opeating system)  மேம்படுத்தப்பட்ட 11 வது பதிப்பாக விண்டோஸ் 11  இன்று  வெளியானது.


உலகின் மிகப்பெரிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனமாக அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனம் (Microsoft Corporation)  செயல்பட்டுவருகிறது. இங்கு கணினிக்குத்தேவையான பல வகையான மென்பொருட்களைத் தயாரிப்பது, மேம்படுத்துவது மற்றும் அதன் உரிமைகளைப்பெறுவது  போன்ற செயல்பாடுகளைக்கொண்டுள்ளது. குறிப்பாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் windowsஎன்னும் இயங்குதளம் தான் உலகின் பெரும்பாலான கணினிகளில் இயங்கி வருகிறது. இந்நிலையில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு அந்நிறுவனம் இயங்குதளத்தினை மேம்படுத்தி வருகிறது. அதன்படி, கடந்த 2015க்கு பிறகு Windows 10 இயங்குதளம் மேம்படுத்தப்பட்டு windows 11 ஆக இன்று வெளியானது.  ஆனால் இதுவரை மைக்ரோசாஃப்டின் அடுத்த தலைமுறை என்று தான் நிறுவனம் தெரிவித்து வந்த நிலையில், Windows 11 என்ற பெயரினை வெளிப்படுத்தாமல் இருந்தது. ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியிட்ட டீஸரினைப்பார்க்கும் பொழுது நிச்சயம் அது  Windows 11ஆக தான் இருக்கும் என யூகிக்க முடிந்தது. இதோடு ஆன்லைனிலும் வெளியான தகவலை அடுத்து நிச்சயம் Windows 11 என்பது உறுதியானது. ஆனால் அது அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இல்லை. இன்று அது அதுகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 



  •  


விண்டோஸ் 11 ன் முக்கிய அம்சங்கள்:


மைக்ரோசாப்டின் அடுத்த தலைமுறை தான் Windows 11 இயங்குதளம் என குறிப்பிடப்படும் நேரத்தில் இது பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளதாக உள்ளது. இந்த  Windows 11 ஐ பயன்பாட்டில்  அனைத்து ஐகான்களும் திரைக்கு நடுவே கொண்டுள்ளது.  ஒருங்கிணைந்த தோற்றத்தினை வழங்குவதோடு ஒவ்வொரு ஐகானையும் ஒரே மாதிரியான பாணியில் புதுப்பித்துள்ளது. குறிப்பாக windows-ஐ நாம் பயன்படுத்தும்பொழுது ஒரு விதத்தொடக்க ஒலியினைக் கேட்டிருப்போம். ஆனால் இந்த Windows 11-இன் தொடக்க ஒலி முன்பை விட கேட்பதற்கு இனிமையானதாக உள்ளது.


மேலும்,  மைக்ரோசாப்ட் ( Microsoft) Windows 10 ஆபரேடிங் சிஸ்டத்தினைப்பயன்படுத்தும் பயனர்களுக்கு வின்டோஸ் 11 இலவசமாக கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால் விண்டோஸ் 8.1 மற்றும் விண்டோஸ் 7 பயனர்களுக்கு புதிய இயங்குதளம் ( operating system)  இலவசமாக கிடைக்குமா? என்பது இதுவரை தெரியவில்லை. குறிப்பாக windows 11   windows 10-ஐப்போல தோற்றமளிக்கிறது. மற்றும் touch screen  மற்றும் touch அல்லாத அனைத்து சாதனங்களும் உகந்தததாக அமைந்துள்ளது. எனவே இந்த விண்டோஸ்11-இன் பயன்பாடு மக்களிடம் வரவேற்பினைப்பொறுவதோடு பலரும் பயன்படுத்த தொடங்கும் இயங்குதளமாக அமையவிருக்கும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.


மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் அப்டேட் எப்போதும், உலகளாவிய கணினி உபயோகிப்பாளர்களுக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். விண்டோஸ் 10க்கு முன்னாள் அவர்களின் இயங்கு தளங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் தான் தற்போது விண்டோஸ் 11 வெளியாகியுள்ளது. விண்டோஸ் 10 போல இதுவும் கணினி பயன்பாட்டாளர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.