தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது. சேலம், தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழைக்கும், கடலோரம் மற்றும் உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை தமிழக உள்மாவட்டங்களில் பரவலாகவும், நாளை மறுநாள் பரவலாகவும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Continues below advertisement

வரும் 27-ந் தேதி வட மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 28-ந் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களிலும், வட உள்மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இவ்வாறு சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement