தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பயனாளர்களை அதிகப்படுத்துவதற்கும், ஏற்கனவே உள்ள பயனாளர்களை தக்க வைத்துக்கொள்வதற்கும் கட்டண சலுகைகள் மற்றும் சேவைகளை வழங்கிவருகின்றன. அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு வங்கிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் பி.எஸ்.என்.எல் -உம் கூட குறைவான கட்டணங்களில் தங்களது சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது ஜியோ, ஏர்டெல் , பி.எஸ்.என்.எல், விஐ உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் வருடாந்திர சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.
ஏர்டெல்
இந்த சந்தாவை பெறுவதற்கு ஆண்டுக்கு 1,458 ரூபாய் செலுத்த வேண்டும். இதன் மூலம் வருடத்திற்கான இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும் 24 ஜிபி அளவிளான டேட்டா வசதியும் , நாள் ஒன்றுக்கு 100 குறுந்தகவல்களையும் அனுப்பும் வசதியும் கிடைக்கிறது. தவிற ஜீ5 ஸ்டீமிங்கும் இலவசமாக கிடைக்கிறது.
ஜியோ
இதன் வருடாந்திர கட்டண தொகை 2399 ரூபாய் ஆகும். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி வீதம் 365 நாட்களுக்கு பெற முடியும் , தினமும் 100 குறுஞ்செய்திகளை அனுப்பிக்கொள்ளலாம். ஜியோவின் பிற சேவைகளான ஜியோ சினிமா, ஜியோ டிவி உள்ளிட்டவற்றை இலவசமாக பெற முடியும். இது வீட்டில் இருந்து பணிபுரிபவர்களுக்கு உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.
வோடஃபோன்
இரண்டு விலைகளில் தனது வருடாந்திர சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒன்று 2599 ரூபாய் திட்டம், மற்றொன்று 1499 ரூபாய் திட்டம். 1499 ரூபாயில் ஆண்டு முழுவதும் இலவச அழைப்புகளை மேற்கொள்ளலாம், தினமும் 100 எஸ்.எம்.எஸ் மற்றும் 24 ஜிபி அளவிலான டேட்டா சேவைகளை வழங்குகிறது. 2599 ரூபாய் திட்டமானது வருடாந்திர அழைப்புகளை இலவசமாகவும், நாள் ஒன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ் மற்றும் 1.5 ஜிபி அளவிலான டேட்டா சேவைகளை வழங்குகிறது. தவிற டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஸ்டீமிங்கினை வழங்குகிறது
பி.எஸ்.என்.எல்:
இதன் கட்டணத்தொகை 1499 ரூபாய். இந்த திட்டத்திற்கு PV 1,499 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஆண்டிற்கு 24 ஜிபி அளவிலான டேட்டாவை இலவசமாக பெற முடியும். மேலும் வருடத்திற்கான அன்லிமிடட் அழைப்புகளை வழங்குகிறது. தினமும் 100 குறுஞ்செய்திகள் அனுமதிக்கும். மற்ற நிறுவனங்களின் சேவையை ஒப்பிடுகையில் இது குறைந்த விலைகளில் கிடைக்கிறது.