ப்ளஸ் 2 மாணவர்களைப் பொதுத்தேர்வுகளுக்குத் தயார்படுத்துவகையில் அவர்களுக்கான ஆன்லைன் அலகுத்தேர்வுகளை அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை. அலகுத்தேர்வுக்கான நெறிமுறைகளை அது தற்போது வெளியிட்டுள்ளது. இதில் மாணவர்கள் வினாக்களுக்கான விடைகளை எழுதி பெற்றோர்களிடம் கையொப்பம் பெற்று, அதை புகைப்படமெடுத்து அனுப்பவேண்டும் என்ற நெறிமுறை வழங்கப்பட்டுள்ளது. விடைத்தாள்கள் வினாத்தாள்கள் தவிர வேறு எந்த செய்திகளும், வீடியோக்களும் வாட்சப் குழுக்களில் பதியப்படக்கூடாது எனவும் நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப்பில் மாணவர்களுக்கு தனியாகவும், மாணவிகளுக்கு தனியாகவும் குழுக்கள் ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தனது நெறிமுறைகளில் தெரியப்படுத்தியுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை பட்டியலிடப்பட்டுள்ள நெறிமுறைகள்:
- மாணவர்கள் வினாத்தாளைப் பார்த்து அதற்குரிய விடைகளைத் தனித்தனிதாளில் எழுதவேண்டும்.
- விடைத்தாளில் பெற்றோர் கையோப்பம் பெற்று பிறகு அதைப் படம்பிடித்து பிறகு PDFஆக மாற்றிப் பதிவேற்ற வேண்டும்.
- விடைத்தாளில் பெயர் மற்றும் தேர்வுத்துறையால் வழங்கப்பட்ட எண் கட்டாயம் குறிப்பிடவேண்டும்,
- வாட்சப் குழுவில் வினாத்தாள் விடைத்தாள் தவிர வேறு எந்த வீடியோ அல்லது புகைப்படப் பரிமாற்றங்களோ இருக்கக் கூடாது.
- ஆசிரியர்கள் விடைத்தாள்களை வாட்சப் மூலம் திருத்தி அதற்கான மதிப்பெண்களை வழங்கவேண்டும்
எழுதிய விடைத்தாள்களை பத்திரமாக வைத்திருந்து மீண்டும் பள்ளிக்குச் செல்லும்போது ஆசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.