உக்ரைன் நாட்டில் ரஷ்ய படைகள் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் தலைநகர் கிவ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல பாதிப்பு ஏற்பட்டுள்ளன. அங்கு பயணிகள் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு நேற்று முதல் இணையதள சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் உக்ரைன் நாட்டில் எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இணையதள சேவையை தர வேண்டும் என்று உக்ரைன் துணை அதிபர் மிகெலியோ ஃபெட்ரோவ் கேட்டிருந்தார். இது தொடர்பாக அவர் ஒரு ட்விட்டர் பதிவை செய்திருந்தார். அந்த பதிவிற்கு எலோன் மஸ்க் ஒரு பதில் பதிவு செய்திருந்தார். அதில், “ஸ்டார்லிங்க் இணையதள சேவையை உக்ரைனில் தொடங்கியுள்ளோம். விரைவில் நிறையே டெர்மினல்கள் அங்கு செயல்படும்” எனக் கூறியிருந்தார். 


 


 






இந்தச் சூழலில் ஸ்டார்லிங்க் இணையதள சேவை என்றால் என்ன?


 


ஸ்டார்லிங்க் இணையதள சேவை என்பது விண்வெளியிலிருந்து செயற்கைக்கோள்களை பயன்படுத்தி அளிக்கப்படும் சேவை. இந்தச் சேவைக்காக சுமார் 200 செயற்கைக்கோள்கள் பூமியின் தாழ்வு வட்டப்பாதையில்(Low Earth Orbit) இந்தச் செயற்கைக் கோள்கள் செலுத்தப்பட்டிருக்கும். இந்த செயற்கைக் கோள்கள் மூலம் சவாலான பகுதிகளில் இணையதள சேவையை அளிக்க முடியும். இணையதள கட்டுமான வசதி செய்ய முடியாத இடங்களில் இதை பயன்படுத்தி எளிதாக அதிவேக இணையதள சேவையை தர முடியும். 


 


ரஷ்ய படைகள் தற்போது உக்ரைன் நாட்டின் இணையதள சேவையை குறி வைப்பதால் ஸ்டார்லிங்க் சேவை அங்கு உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஆகவே தான் இந்த உதவியை உக்ரைன் அரசு கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அவரின் இந்த உடனடி பதிவை உக்ரைன் நாட்டு அரசு தன்னுடைய அதிகார்ப்பூர்வ ட்விட்டர் பதிவில் நன்றி தெரிவித்துள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண


மேலும் படிக்க:ஐபோன் 'பேஸ் ஐடி' பிரச்சனை: டிவைஸ் மாத்தமுடியாது.. ஆனா.. அதிர்ச்சி கொடுத்த Apple நிறுவனம்