தற்போது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பலரும் தங்களுக்கு பிடித்தது போன்று விதவிதமாக ஹேர்ஸ்டைலுடன் பள்ளிக்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். பல மாணவர்கள் மிகவும் நேர்த்தியாக பள்ளிக்கு வந்தாலும், சிலர் மிகவும் வித்தியாசமாக பார்ப்பதற்கே வித்தியாசமாக காட்சியளிக்கும் விதமான ஹேர்ஸ்டைலில் பள்ளிக்கு வருகின்றனர்.


சென்னை, புளியந்தோப்பு பகுதியில் உள்ள அம்மை அம்மாள் தெரு பகுதியில் உள்ளது சென்னை உயர்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். சுமார் 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக பொறுப்பு வகித்தவர் முஸ்தர்ஜான்.




இவர் நேற்று முன்தினம் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொணடிருந்தார். அப்போது, அந்த வகுப்பில் உள்ள இரண்டு மாணவர்கள் சேட்டை செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்களை அழைத்து தலைமை ஆசிரியர் கண்டித்துள்ளார். மேலும், இருவரும் மிகவும் அதிகமாக முடி வைத்திருந்ததால் இரண்டு மாணவர்களையும்” படிக்குற வயதில் தலைமுடியை வெட்டாமல் ரவுடிபோல் வந்தால் எப்படி? நாளைக்கு முடிவெட்டிவிட்டுதான் பள்ளிக்கு வர வேண்டும்.” என்று கண்டித்துள்ளார்.


தலைமை ஆசிரியர் கண்டித்ததால் மாணவர்கள் இருவரும் கோபமடைந்துள்ளனர். இதையடுத்து, ஆத்திரத்தில் தலைமை ஆசிரியரையே தாக்கியுள்ளனர். இதுகுறித்து, புளியந்தோப்பு காவல்நிலையத்தில் தலைமை ஆசிரியர் முஸ்தர்ஜான் புகார் அளித்தார். இதையடுத்து, அந்த 2 மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து விசாரித்தனர்.




அப்போது, படிக்குற வயதில் இவ்வாறு நடந்து கொண்டால் வாழ்க்கை பாழாகிவிடும் என்று அறிவுரை கூறியதுடன் கண்டித்தனர். தலைமை ஆசிரியர் இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று கூறியதால் இரு மாணவர்களையும் கண்டித்து அனுப்பினர். பெற்றோர்களுக்கும் அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர். முடி வெட்டக் கூறியதால், தலைமை ஆசிரியரையே மாணவர்கள் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


Watch video : "என் மகளை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து போங்க".. உக்ரைன் போரில் மகளை கட்டிபிடித்து அழுத தந்தை!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண