உலகளவில் பலர் உரையாடல் நடத்த பயன்படுத்தும் மிகவும் முக்கியமான செயலிகளில் ஒன்று வாட்ஸ் அப். இந்த செயலியின் மூலம் பலரும் குறுஞ்செய்திகள் மற்றும் வீடியோ காலிங் வசதி ஆகியவற்றை பயன்படுத்தி வருகின்றனர். இதன்காரணமாக இது மிகவும் முக்கியமான செயலிகள் ஒன்றாக மாறியுள்ளது. இதில் பலரும் தங்களுடைய தகவல்களை பரிமாறி வருவதால் இதை ஹேக் செய்வது மற்றும் வாட்ஸ் அப் மூலம் பலரை ஏமாற்றவது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


அந்தவகையில் தற்போது வாட்ஸ்அப் கணக்கை வைத்து ஏமாற்ற ஒரு புதிய வழியை சிலர் பயன்படுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக பிரிட்டனில் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அங்கு உள்ள சில சைபர் க்ரைம் குற்றவாளிகள் வாட்ஸ் அப் கணக்கை வைத்து பலரை ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது. 


 


எப்படி ஏமாற்றுகிறார்கள்?


சைபர் க்ரைம் குற்றவாளிகள் சிலர் வாட்ஸ் அப் கணக்கை வைத்து கொண்டு சிலருக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்புகின்றனர். அதில் அவர்கள் அந்த நபருக்கு தெரிந்தவர் போல் செய்தியை அனுப்புகின்றனர். அதன்பின்னர் அவர்களிடம் தாங்கள் ஒரு ஆபத்தில் சிக்கியுள்ளது போல் கூறுகின்றனர். ஆகவே உடனடியாக அவர்களுக்கு உதவ பணம் வேண்டும் என்ற வகையில் தொடர்ந்து உரையாடல் செய்து பண மோசடி செய்து வருகின்றனர். இந்த மாதிரியான குறுஞ்செய்திகள் குறிப்பாக ஹலோ மம்மி, ஹலோ டாடி, ஹலோ நண்பா போன்ற வகையில் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. 




இந்தியாவில் இது நடைபெறுகிறதா?


இந்தியாவில் இந்த மாதிரியான சில குறுஞ்செய்திகள் சமீபத்தில் வர தொடங்கியுள்ளதாக சில சைபர் க்ரைம் ஆராய்ச்சியாளார்கள் தெரிவிக்கின்றனர். எனவே இதுபோன்ற தெரியாத நபர்களிடம் குறுஞ்செய்தி வரும்பட்சத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்தியாவில் ஃபேஸ்புக் கணக்கை பயன்படுத்தி சமீபத்தில் பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அதில் ஃபேஸ்புக் கணக்கை பயன்படுத்தி பலருக்கு இதுபோல் அவரசமாக உதவி என்று பலரும் காசு மோசடி செய்யப்பட்டது. தற்போது அதேபோன்று வாட்ஸ் அப் பிலும் ஒரு புதிய மோசடி தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.  


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண


 


மேலும் படிக்க: முழு நேர influencer ஆகிவிடலாமா என்று சிந்திக்கிறேன்!’ - ஆச்சரியத்தை ஏற்படுத்திய எலான் மஸ்க்!