Twitter Update: ட்விட்டர் தளத்தில் வீடியோ கால் வசதி விரைவில் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே மெசேஜ் அம்சம் மட்டும் இருக்கும் நிலையில், தற்போது புதிய அம்சம் வரவுள்ளது.

Continues below advertisement

ட்விட்டரில் குவியும் மாற்றங்கள்:

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்தே, ட்விட்டரில் பல மாற்றங்களை செய்து வருகிறார். நிறுவனத்தின் அடிப்படை தத்துவத்தையே மாற்றியமைத்து,  காசு கட்டினால்தான் ப்ளூ டிக் என்று தொடங்கி ப்ளூ டிக் வைத்திருப்பவர்கள் 10,000 வார்த்தைகள் வரை ட்வீட் செய்யலாம் என்பது வரை பலவற்றை குவித்து தள்ளினார். கடும் விமர்சனங்களுக்கு மத்தியிலும் அடுத்தடுத்த அப்டேட்கள் அமல்படுத்தப்பட்டன. அதோடு, பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத செயலிழந்த கணக்குகளை நீக்கி, காப்பகப்படுத்தும் திட்டத்தையும் ட்விட்டர் அறிவித்தது. 

Continues below advertisement

பணம் கட்டி வெரிஃபைடு செய்யப்பட்ட கணக்குகளை கொண்ட பயனாளர்கள் உட்பட பலருக்கும் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே வெளியான அறிவிப்பின்படி, வெரிஃபைடு செய்யப்பட்ட பயனாளர்கள், வெரிஃபைடு செய்யப்படாத பயனாளர்கள் மற்றும் புதிய வெரிஃபைடு செய்யப்படாத பயனாளர்கள் என 3 விதங்களாக பிரிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

புதிய வசதி:
 
பொதுவாக ட்விட்டரில் மெசேஜ், ஸ்பெஸ் போன்றி அம்சங்கள் இருக்கின்றன. இந்நிலையில், பயனர்களை கவரும் விதமாக புதிய அம்சத்தை ட்விட்டர் நிறுவனம் கொண்டு வர உள்ளது. அதாவது, ட்விட்டர் தளத்தில் வீடியோ கால் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது. ட்விட்டர் தளத்தில் இடம்பெற்று இருக்கும் புதிய கால் ஐகானை கிளிக் செய்து ஆடியோ அல்லது வீடியோ கால் மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ட்விட்டரில் ஆடியோ கால் வசதியும் இல்லை. அந்த வகையில், வீடியோ கால் போன்றே ஆடியோ கால் வசதியும் வழங்கப்பட இருக்கிறது.  இதில், மைக்ரோபோனில் மியூட்ஆன் , மியூட், லவுட் ஸ்பீக்கர்,  டர்ன் ஆஃப் வீடியோ  மற்றும் என்ட் தி கால் என நான்கு ஆப்ஷன்கள் உள்ளன. இருப்பினும் புதிய அம்சம் பற்றி ட்விட்டர் சார்பில் இருந்து  எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த புதிய அம்சத்தை ட்விட்டர் சிஇஓ லிண்டா யாக்கரினோ தெரிவித்திருக்கிறார்.

அண்மையில் வந்த அப்டேட்

வெரிஃபைடு செய்யப்பட்ட கணக்குகளை கொண்ட பயனாளர்கள் நாள் ஒன்றிற்கு 10 ஆயிரம் ட்வீட்களை அணுக முடியும். வெரிஃபைடு செய்யப்படாத பயனாளர்கள் 1000 ட்வீட்களையும், புதிய வெரிஃபைடு செய்யப்படாத கணக்குகளை கொண்ட பயனாளர்கள் 500 ட்வீட்களையும் அணுக முடியும். மேலும், வெரிஃபைடு செய்யப்படாத கணக்கில் இருந்து, மற்றொரு கணக்கிற்கு அனுப்பக்கூடிய  நேரடி மெசேஜ்களின் (DM) அளவை குறைத்துள்ளது ட்விட்டர் நிறுவனம்.  இதனால் ட்விட்டர் ப்ளூ டிக் இல்லாத பயனர்கள், ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு தான் மெசெஜ்களை (DM) பகிரிந்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.