பதிவிட்ட ட்வீட்டை எடிட் செய்யப்படும் அம்சத்தை கொண்டு வருமாறு பல்வேறு தரப்பினரும் பல காலமாக கோரிக்கை வைத்து வந்தனர். அதன்படி எடிட் செய்யப்படும் முறை பரிசோதனையில் இருப்பதாக டுவிட்டர் நிர்வாகம் தெரித்திருந்தது. இந்நிலையில் செப்டம்பர் 21ம் தேதி முதல் ட்விட்டரில் எடிட் ஆப்ஷனை கொண்டு வர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆனால் இது அனைவருக்குமானது அல்லது. மாதம் 4.99 டாலர்கள் செலுத்தி ப்ளூ சப்ஸ்கிரைபர்களாக மாறும் கணக்குகளுக்கு மட்டுமே இந்த வசதி வழங்கப்படும். அதாவது மாதத்துக்கு ரூ.397 பணம் செலுத்த வேண்டும்.
எடிட்..
பேஸ்புக்கில் எடிட் ஆப்ஷன் இருந்தாலும் ட்விட்டரில் எடிட் என்பதே இல்லை. ஒருவேளை நீங்கள் தவறுதலாக ட்வீட் செய்தால் அதனை டெலிட் மட்டுமே செய்ய முடியும். எடிட் செய்ய முடியாது. சில நேரங்களில் எழுத்துப்பிழைகள், இலக்கணப்பிழைகள், ஹேஸ்டேக் தவறுகள் போன்ற கவனக்குறைவுகள் ட்வீட்டில் வந்துவிடுவதாகவும், அதனை எடிட் செய்யும் ஆப்ஷனை கொடுக்க வேண்டுமென்றும் ட்விட்டர்வாசிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆரம்பம் முதலே அந்த ஒரு ஆப்ஷனை கொடுக்காத ட்விட்டர் தற்போது சந்தா அடிப்படையில் அந்த ஆப்ஷனைக் கொடுக்கிறது. எடிட் ஆப்ஷன் கொடுக்கப்பட்டாலும் சில நிபந்தைகளின் அடிப்படையிலேயே அந்த வசதி கொடுக்கப்படுகிறது.
ட்வீட் பப்ளிஷ் செய்யப்பட்டபின் தேவையென்றால் எடிட் செய்துகொள்ளலாம். எடிட் செய்யப்பட்ட ட்வீட் பதிவில், எடிட் செய்யப்பட்டதற்கான லேபிள் இருக்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றால் என்ன எடிட் செய்யப்பட்டது போன்ற விவரத்தை பாலோவர்ஸ் தெரிந்துகொள்ளவும் முடியும். இந்த ஆப்ஷன் முதலில் குறிப்பிட்ட நாட்டினருக்கு மட்டுமே கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இந்திய ட்விட்டர்வாசிகளுக்கு இந்த ஆப்ஷன் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இது குறித்து தெரிவித்த ட்விட்டர் நிறுவனம், நீண்டகாலமாக பயனர்கள் கேட்ட எடிட் ஆப்ஷனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளோம். முதலில் குறிப்பிட்ட நாட்டு பயனர்களுக்கு கொடுத்து அதன் தேவை மற்றும் பயனர்களுக்கு எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை உற்று நோக்க உள்ளோம். அதனடிப்படையில் விரைவில் அனைவருக்கும் கொடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
தகவல் திருட்டு..
பல்வேறு சிறப்பு அம்சங்கள் அடிக்கடி வந்தாலும் விமர்சனத்திலும் சிக்குகிறது ட்விட்டர். சமீபத்தில் ட்விட்டர் பயனாளர்கள் தகவல்கள் ஹேக்கர்ஸால் திருடப்பட்டதாக செய்திகள் வெளியானது. அதனை ட்விட்டர் நிறுவனமும் உறுதி செய்தது. ட்விட்டரில் கடந்த 2021 ஆம் ஆண்டு a zero-day attack என்னும் சைபர் தாக்குதல் நடந்துள்ளது. இதில் ட்விட்டரில் உள்ள கிட்டத்தட்ட 5.4 மில்லியன் பயனர்களிடன் டேட்டா திருடப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இதனை உறுதி செய்த ட்விட்டர் நிறுவனம், அது செய்யப்பட்டுவிட்டதாகவும் இருந்தாலும் இன்னும் சில பயனாளர்களின் தரவுகள் அட்டாரக்கர்ஸிடம் இருக்கலாம் என்றும் கூறுகிறது.URL, சுயவிவரப் படம் மற்றும் பிற தரவு போன்ற தகவல்களுடன் சுமார் 5,485,636 கணக்குகளின் தரவு தன்னிடம் இருப்பதாக கடந்த மாதம் தாக்குதல் நடத்தியவர்கள் பகிரங்கமாக அறிவித்தனர். ட்விட்டர் கணக்கைச் சரிபார்ப்பதற்கும் அவர்களின் தகவல்களைப் பெறுவதற்கும் மின்னஞ்சல் தொலைபேசி எண்ணை ஹேக்கர்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.