அடுத்து வரும் 10 ஆண்டுகளில் உலக பொருளாதாரம் மந்த நிலையை சந்திக்க கூடும் என சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கி எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்திய பங்குச் சந்தைகள் இன்று சரிவுடன் நிறைவடைந்தன.
மும்பை பங்குச் சந்தை:
மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 1033 புள்ளிகள் குறைந்து 58 ஆயிரத்து 840.79 புள்ளிகளாக உள்ளன.
டெக் மஹிந்திரா மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் சென்செக்ஸில் பெரிய இழப்புகளை சந்தித்தன. இன்ஃபோசிஸ், மஹிந்திரா & மஹிந்திரா, விப்ரோ, டிசிஎஸ், நெஸ்லே மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் சரிவை சந்தித்தன.
ஆனால் இண்டஸ்இண்ட் வங்கியின் பங்குகள் மட்டும் ஏற்றத்தில் சென்றன.
தேசிய பங்குச் சந்தை
தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 346.55 புள்ளிகள் குறைந்து 17 ஆயிரத்து 530 புள்ளிகளாக உள்ளன. கடந்த வாரங்களை ஒப்பிடுகையில் ஏறக்குறைய ஒரு சதவிகிதம் அளவிலான சரிவை தேசிய பங்குச் சந்தை சந்தித்துள்ளது.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் பங்குகள் மேலும் சரிவை சந்தித்துள்ளன
இந்திய பங்குச் சந்தைகள் ஆசிய தொகுப்பில் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. நாட்டில் நிலவி வரும் பணவீக்கம் மற்றும் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதம் அதிகரிப்பு காரணமாக பங்குச் சந்தைகள் சரிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்