மத்திய சீன நகரமான சாங்ஷாவில் உள்ள ஸ்கைஸ்கிராப்பர் கட்டிடத்தில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டதாக சீன அரசின் ஊடகம் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல் வெளியாகவில்லை.






தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து அடர்த்தியான புகை வெளியேறி வருகிறது. கட்டிடத்தில் உள்ள மாடிகள் மூர்க்கமாக எரிந்து வருகின்றன" என செய்தி வெளியிடப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான சீனா டெலிகாமின் அலுவலகம் இயங்கி வந்த உயரமான கட்டிடத்தில் தீப்பிடித்துள்ளது.






சிசிடிவி செய்தி நிறுவனம் வெளியிட்ட புகைப்படத்தில், கட்டிடத்தின் வழியாக ஆரஞ்சு நிற தீப்பிழம்புகள் எரிவதை காணலாம். அதிலிருந்து, கருப்பு புகை கிளம்புவதை பார்க்கலாம்.


கட்டிட கோபுரத்தின் வெளிப்புறம் கருகி இருப்பதை காட்டும் வகையில் உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்று சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்டது. ஹுனான் மாகாணத்தின் தலைநகரான சாங்ஷாவில் சுமார் 10 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.


218-மீட்டர் (715 அடி) கட்டடம் 2000 இல் கட்டி முடிக்கப்பட்டது. பெரிய ரிங் ரோடுக்கு அருகில் இது அமைந்துள்ளது. சீனாவில் பெரிய தீ விபத்துகள் ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. அங்கு கட்டிட விதிகள் மெத்தனமான முறையில் கடைபிடிக்கபடுவதும் அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் நடைபெறுவதாலும் இது போன்ற விபத்துகள் தொடர் கதையாகியுள்ளது. இதன் காரணமாக தீ விபத்து நடைபெறும் இடத்திலிருந்து தப்பிப்பது கடினமாக கருதப்படுகிறது.


கடந்த ஆண்டு ஜூலை மாதம், வடகிழக்கு ஜிலின் மாகாணத்தில் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர். குறைந்தது 25 பேர் காயமடைந்தனர்.


அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, மத்திய ஹெனான் மாகாணத்தில் உள்ள ஒரு தற்காப்புக் கலைப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் கொல்லப்பட்டனர் பெரும்பாலும் குழந்தைகள் அந்த தீ விபத்தில் இறந்தனர். தீ பாதுகாப்பு தரநிலைகள் குறித்த சலசலப்பை ஏற்படுத்தியது.