இந்தியாவில் அதிக நபர்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ஒன்று ட்விட்டர் தளம். ட்விட்டர் தளம் அடிக்கடி தன்னுடைய வாடிக்கையாளர்களை கவர புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் ட்விட்டர் தளத்தில் விரைவில் புதிதாக ஒரு அம்சம் வெளிவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சில தொழில்நுட்பம் சார்ந்த தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி இனிமேல் ட்விட்டரில் ஒரு பதிவை இருவர் சேர்ந்து செய்யும் ‘CoAuthor’ என்ற வசதி அறிமுகம் செய்யப்பட்ட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்தி செய்தி தொடர்பாளர் ஒரு தளத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில், “ட்விட்டர் நிறுவனம் வாடிக்கையாளர்கள் எப்படி மற்றவர்களுடன் எளிதாக பேச முடியம் என்பது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த ‘CoAuthor’ வசதி இருக்கும் என்று கருதப்படுகிறது.
இதன் சோதனை முயற்சி தற்போது நடைபெற்று வருகிறது. இதை எவ்வாறு வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவார்கள் என்பது குறித்து நாங்கள் பரிசோதனை செய்து வருகிறோம். இது முழுமையாக முடிந்த பிறகு இந்த வசதி அனைவருக்கும் வரும். இந்த புதிய வசதி மூலம் ஒருவரின் பதிவு பல்வேறு நபர்களை எப்படி சென்று அடைய முடியும் என்பது தொடர்பாக பரிசோதித்து வருகிறோம். இது வாடிக்கையாளர்களை நிச்சயம் கவரும் வகையில் அமைந்திருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த ‘Co Author’ தொடர்பாக 2021ஆம் ஆண்டே ஒரு நபர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அப்போது முதல் ட்விட்டர் நிறுவனம் இந்த அம்சம் தொடர்பாக வேலை செய்து வருதாக கூறப்படுகிறது. இது தொழில்சார்ந்த கணக்குகளுக்கு முற்றிலும் உதவும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஒரு போட்காஸ்ட், செய்தி கட்டுரைகள் ஆகியவற்றை பலர் இணைந்து செய்யும் அவர்களுக்கும் இந்தப் புதிய வசதி உதவிகரமாக அமையும் என்று கருதப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்