உலகின் நம்பர் ஒன் மைக்ரோ பிளாகிங் தளமாக செயல்பட்டு வருகிறது ட்விட்டர். இதற்கு கோடிக்கணக்கான பயனாளர்கள் உள்ளனர். சமீபத்தில் ட்விட்டர் பயனாளர்கள் தகவகல்கள் ஹேக்கர்ஸால் திருடப்பட்டதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் அதனை ட்விட்டர் நிறுவனமும் உறுதி செய்துள்ளது.
ஸீரோ டே தாக்குதல் :
ட்விட்டரில் கடந்த 2021 ஆம் ஆண்டு a zero-day attack என்னும் சைபர் தாக்குதல் நடந்துள்ளது. இதில் ட்விட்டரில் உள்ள கிட்டத்தட்ட 5.4 மில்லியன் பயனர்களிடன் டேட்டா திருடப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இதனை உறுதி செய்த ட்விட்டர் நிறுவனம், அது செய்யப்பட்டுவிட்டதாகவும் இருந்தாலும் இன்னும் சில பயனாளர்களின் தரவுகள் அட்டாரக்கர்ஸிடம் இருக்கலாம் என்றும் கூறுகிறது.URL, சுயவிவரப் படம் மற்றும் பிற தரவு போன்ற தகவல்களுடன் சுமார் 5,485,636 கணக்குகளின் தரவு தன்னிடம் இருப்பதாக கடந்த மாதம் தாக்குதல் நடத்தியவர்கள் பகிரங்கமாக அறிவித்தனர். ட்விட்டர் கணக்கைச் சரிபார்ப்பதற்கும் அவர்களின் தகவல்களைப் பெறுவதற்கும் மின்னஞ்சல் தொலைபேசி எண்ணை ஹேக்கர்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.
எச்சரிக்கை :
பிரபல Bleeping Computer இன் கூற்றுப்படி, தரவு கடைசியாக $30,000 க்கு விற்கப்பட்டது தெரியவந்தது. இது தவிர சில தரவுகளை பொது வெளியில் இலவசமாகவே ஹேக்கர்ஸ் வெளியிட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது. bounty program மூலம் ட்விட்டர் இந்த தீங்கிழைக்கும் ஹேக்கர்ஸ் ஊடுறுவலையும் தகவல் திருடப்பட்டதையும் அறிந்துக்கொண்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த சிக்கல் சரி செய்யப்பட்டாலும், தாக்குபவர் ஏற்கனவே தரவுகளை வைத்திருப்பதற்கான சாத்தியக்கூறுகளை கணக்கில் கொள்ளவில்லை என்று ட்விட்டர் கூறுவது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. இதன் மூலம் இன்னும் சில பயனாளர்களின் தரவுகள் ஹேக்கர்ஸ் வசம் இருக்கலாம். இதனால் பொதுவெளியில் எப்போது வேண்டுமானாலும் அந்த தகவலை வெளியிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தகவல் திருடப்பட்ட பயனாளார்கள் ஒவ்வொருவருவருக்கும் இது குறித்த அறிவிப்பை தனியாக வெளியிட முடியாது என்பதால் மொபைல் செயலியை பயன்படுத்தி authentication app மற்றும் hardware key மூலம் n two-factor authentication ஐ செயல்படுத்த அறிவுறுத்துகிறது.இவை இரண்டையும் Twitter இன் மொபைல் பயன்பாட்டில் அமைக்கலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்