மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு, நேற்று குறைந்தது. கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு, நேற்று முன் தினம், வினாடிக்கு ஒரு லட்சத்து, 88 ஆயிரத்து, 319 கன அடி தண்ணீர் வந்தது. மதியம் 12:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, ஒரு லட்சத்து, 46 ஆயிரத்து, 197 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. டெல்டா பாசன பகுதி குறுவை சாகுபடிக்காக, காவிரியாற்றில், ஒரு லட்சத்து, 46 ஆயிரத்து, 77 கன அடி தண்ணீரும், நான்கு பாசன கிளை வாய்க்காலில், 1,020 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், மலைப்பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு, 3,028 கன் அடி தண்ணீர் வந்தது. இதனால், அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 2,775 கன அடி தண்ணீர் திறப்பு, நேற்று திறக்கப்பட்டது. கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 4,334 கன அடி தண்ணீர் வந்தது. புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணை நீர் மட்டம், 87.14 அடியாக இருந்தது.
திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, நங்காஞ்சி அணை நீர்மட்டம் தற்போது, 33.79 அடியாக உள்ளது. நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 15.81 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்