கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாபெரும் புத்தகத் திருவிழா நடைபெறுவதை ஒட்டி முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் (குளித்தலை), இளங்கோ (அரவக்குறிச்சி), சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தெரிவிக்கையில், கரூர் மாவட்ட வரலாற்றில் முதன்முறையாக முதலமைச்சரின் நல்லாசியோடு, அரசு நிதிகளைக் கொண்டு மிகப்பெரிய ஒரு வரலாற்று சிறப்புமிக்க புத்தகத் திருவிழா வருகின்ற 19ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக 100 அரங்குகள் அமைக்கப்பட்டு அந்த 100 அரங்கில் ஏறத்தாழ பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் இடம் பெறக்கூடிய அளவிற்கு அரங்குகள் அமைக்கப்பட்டு, கூட்ட அரங்குகளும் அமைக்கப்பட்டு காலை 10 மணி முதல் தொடங்கி இரவு 9 மணி வரை புத்தகத்தின் விழா நடக்கக்கூடிய அளவிற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. குறிப்பாக மாலை 4 மணி முதல் 6 மணி வரை கலை நிகழ்ச்சிகளும், 6 மணி முதல் 8 மணி வரை சிந்தனைகள் உள்ளடங்கிய சான்றோர்கள், பெரியோர்கள் பங்கு பெறக்கூடிய சாலமன்பாப்பையா ,மதிப்பிற்குரிய திண்டுக்கல் லியோனி, சுகிசிவம் உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க சான்றோர்கள் 6 மணி முதல் 8 மணி வரை இருக்கக்கூடிய நிகழ்வில் பங்கு பெற்று சிறப்பிக்க இருக்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகள் வருகின்ற 19.8.2022 அன்று முதலமைச்சரின் நல்லாசியோடு கரூர் மாவட்டத்தில் மிகப்பெரிய வரலாற்று சிறப்புமிக்க புத்தகத் திருவிழா தொடங்க இருக்கின்றன. குறிப்பாக திருமாநிலையூர் பகுதியில் கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான புதிய பேருந்து நிலையம் அமைக்க உள்ள இடத்தில் இந்த புத்தகத் திருவிழா எழுச்சியோடு நடைபெற இருக்கின்றன. இந்த கூட்ட அரங்கில் ஆயிரம் பேர் பங்கு பெறக்கூடிய அளவிற்கு அதற்கான அரங்கைகளும் அமைப்பதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் திட்டமிடப்பட்டுள்ளன. இன்னும் இந்த புத்தகத் திருவிழாவில் 2 லட்சம் பேர் இந்த 11 நாட்களில் பங்கு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைவிட கூடுதலாக கலந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்திட வேண்டும்.
மேலும், ஒவ்வொரு நாளும் பள்ளி, கல்லூரிகளில் சார்ந்து இருக்கின்ற மாணவ, மாணவிகள் இந்த புத்தகத் திருவிழாவில் பங்கு கொள்வதற்கான ஏற்பாடுகளும், பஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளன. இந்த மாபெரும் புத்தகத் திருவிழா சிறப்பாக அமைய கரூர் மாவட்ட பொதுமக்கள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வாசகர் வட்டத்தை சேர்ந்தவர்கள் மற்றும் புத்தக பிரியர்கள் சிறந்த ஒத்துழைப்பை நல்க வேண்டும் என தெரிவித்தார்
இவ்வாய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர்கள் எம் லியாகத், கவிதா (நிலமெடுப்பு) வருவாய் கோட்டாட்சியர்கள், க.புஷ்பா தேவி, செல்வி, ரூபினா, கரூர் தனித்துறை ஆட்சியர் சபாதி, சைபுதீன், வாசகர் வட்டம் தீபம் சங்கர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்