டுவிட்டரில் விரைவில் எடிட் ஆப்சன் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக டுவிட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டுவிட்டரில் எடிட் செய்யப்படும் பயன்பாட்டை பரிசோதித்து வருவதாக டுவிட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பதிவிட்ட ட்வீட்டை எடிட் செய்யப்படும் அம்சத்தை கொண்டு வருமாறு பல்வேறு தரப்பினரும் பல காலமாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் எடிட் செய்யப்படும் முறை பரிசோதனையில் இருப்பதாக டுவிட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது
சோதனையில் எடிட் ஆப்சன்:
எடிட் செய்யப்படும் ட்வீட் அம்சம் தற்போது பயன்பாட்டு சோதனையில் இருப்பதாக டுவிட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சிறப்பம்சம் அடுத்த மாதத்தில் ப்ளூ டிக் சந்தாதார்களுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பேஸ்புக்கில் இருக்கும் அம்சங்கள் போன்றே எடிட் செய்யலாம். தற்போது வரை பதிவிட்ட ட்விட்டை டெலிட் செய்யலாமே தவிர, எடிட் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், எடிட் அம்சத்தை பெறுவதற்கு சில நிபந்தனைகளை ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- எடிட் பயன்பாட்டை பெறுவதற்கு குறிப்பிட்ட பணத்தை செலுத்த வேண்டும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
- மேலும் பதிவு செய்யப்பட்ட ட்விட்டை, முதல் 30 நிமிடங்களுக்குள்ளாகவே எடிட் செய்ய வேண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- மேலும் எடிட் செய்யப்பட்ட ட்வீட் பதிவில், எடிட் செய்யப்பட்டதற்கான லேபிள் இருக்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இது ப்ளு டிக் பயன்பாட்டாளர்களுக்கு மட்டுமே கிடைக்கப்பெறும், பிற பயன்பாட்டாளர்களுக்கு அடுத்த கட்டமாக கொண்டு வரப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து ட்விட்டர் நிர்வாக அதிகாரி தெரிவிக்கையில், பயனாளர்களின் நீண்ட கால கோரிக்கையான் எடிட் ஆப்சன் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.
இதற்கு முன்பு இன்ஸ்டாகிராமில் உள்ள குழுவை ஏற்படுத்தி, அவர்களுக்கு பதிவுகளை அனுப்பும் வசதிகள் போன்றே ட்விட்டரிலும் வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த பயன்பாடு குறித்து, பல்வேறு தரப்பினரும் பல்வேறு விதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.