அமெரிக்காவில் உள்ள இளைஞரை தேனீக்கள் கொட்டியதால், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இளைஞரை தாக்கிய தேனீ:


அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் பெல்லாமி என்னும் இளைஞர், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வீட்டின் அருகில் உள்ள மரத்தின் மரக்கிளைகளை வெட்டியுள்ளார். அந்த மரத்தில் ஆப்பிரிக்க கில்லர் தேனீக்கள் கூடு கட்டி இருந்துள்ளன. அப்போது தவறுதலாக ஆஸ்டின் தேனீக்கள் இருந்த மரக்கிளையை வெட்டி விட்டார்.


இதனால் கூடுகளிலிருந்து பறந்த தேனீக்கள் ஆஸ்டினை கொட்ட ஆரம்பித்தன. இதனால் என்னவென்று செய்வதறியாது ஆஸ்டின் நிலை குலைந்தார். உடனே அவரின் அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் வந்து பார்த்தபோது, தேனீக்கள் கொட்டப்படுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.




தீவிர சிகிச்சைள்:


ஆஸ்டினை காப்பாற்ற எங்களால் முடியவில்லை என்றும், அவரை சுற்றி பல தேனீக்கள் இருந்ததாகவும் அதனால் அவரின் அருகே சென்றால் தாமும் தாக்கப்படுவோம் என அஞ்சியதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரை தேனீக்கள் அவரை 20 ஆயிரம் முறைக்கும் மேலாக தேனீக்கள் கொட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவரை பல தேனீக்களை விழுங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




இந்நிலையில், தற்போது அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் கோமா நிலைக்கு சென்று திரும்பியதாகவும் கூறப்படுகிறது. இவர் அபாய கட்டத்திலிருந்து மீண்டு வருவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.