வரும் நாட்களில் இந்தியாவில் ஸ்மார்ட் டிவிக்கள் மற்றும் தொலைக்காட்சிகளின் விலை வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


சீனாவில் கொரோனா பரவல் காரணமாக தற்போது அங்கு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் தொலைக்காட்சி உற்பத்தி நிறுவனங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் வரத்து குறைந்து, இந்தியாவில் தொலைக்காட்சி உற்பத்தி மற்றும் விநியோகம் தடைப்பட்டுள்ளது. அதே போல உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போரின் எதிரொலியும் இந்த தொலைக்காட்சி உற்பத்தி தட்டுப்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே சுமார் இரண்டு மாதங்களாக நீடித்து வரும் மோதல் உலகெங்கிலும் உள்ள எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களை பாதிக்கத் தொடங்கியுள்ளது. , இந்தியாவில் உள்ள டிவி உற்பத்தியாளர்களுக்கும் இது நெருக்கடியை உண்டாக்கியுள்ளது.ஏனெனில் இந்திய சந்தையில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் நுழைவு நிலை மற்றும் பட்ஜெட் மாடல்கள் மூலம்தான் அதிக அளவு வருவாயை ஈட்டுகின்றனர்.மூலப்பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் உயர்வு உள்ளிட்ட தற்போதைய சூழல் , உற்பத்தியாளர்கள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய  நிலைக்கு தள்ளியிருக்கிறது. இதனால் தொலைக்காட்சி விற்பனையயும் நிறுவனங்கள் உயர்த்த திட்டமிட்டிருக்கின்றன.




"பல்வேறு மூலப்பொருட்கள், சேவைகள் மற்றும் இறுதிப் பொருட்களின் விலைகள்  குறைந்தது ஐந்து முதல் 10 சதவிகிதம் வரை  விலை உயரும்" என்று நொய்டாவை தளமாகக் கொண்ட Blaupunkt, Thomson, Kodak பிராண்டுகளின் உற்பத்தி நிறுவனமான  Super Plastronics (SPPL) இன் CEO, Avneet Singh Marwah தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் சீனாவில் ஊரடங்கு காரணமாக இந்தியாவிற்கு கப்பல் வழியாக வரும் மூலப்பொருட்களின் வரத்து 100 சதவிகிதம் தடைப்பட்டிருப்பதையும் போக்குவரத்தில் தாமதம் ஏற்படுவதையும் உறுதி செய்திருக்கிறார்.SPPL ஐப் போலவே, பெங்களூரைச் சேர்ந்த Indkal டெக்னாலஜிஸும் சமீப காலமாக விநியோகத்தில் சிக்கலை சந்தித்து வருகிறது.


 


சிப்செட் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் குறிப்பிட்ட சில மூலப்பொருட்களின் உற்பத்தியை உக்ரைன் மற்றும் ரஷ்யா தயாரித்து , ஏற்றுமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.  இருநாடுகளுக்கு இடையேயான பிரச்சனைகள் தொடரும் பட்சத்தில் அது உதிரிபாக விலைகளில் பெரிய அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்றும், இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகளின் விலைகளில் மிகப் பெரிய அளவிலான அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இது பயனாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. தொலைக்காட்சிகளின் விலை எத்தனை சதவிகிதம் உயரம் என்பது குறித்த சரியான தகவல்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்றாலும் கூட, இது அடுத்த மாத தொடக்கத்தில் அமலுக்கு வரலாம் என கூறப்படுகிறது. க சந்தையில்  டிவியின் விலை உயர்வை எதிர்பார்ப்பது ஒன்றும் புதிதல்ல. கொரோனா ஊரடங்கு காரணமாக  Xiaomi, Samsung, LG மற்றும் Realme உள்ளிட்ட நிறுவனங்கள் கடந்த ஆண்டு அனைத்து பிரிவுகளிலும் தங்கள் டிவிக்களின்  விலையை சுமார் 10 சதவீதம் அதிகரித்தன என்பது குறிப்பிடத்தக்கது.