பிரபல One Plus நிறுவனம் தனது Y சீரிஸ் வரிசையில் அடுத்த ஸ்மார்ட் டிவியை சந்தப்படுத்தியிருக்கிறது. One Plus TV Y1S Pro என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த டிவியானது  43-inch  அளவில் கிடைக்கிறது. மேலும்   4K UHD திரையுடன் 10-பிட் கலர் டெப்த் வசதி, Dolby Audio தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் என பல மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் களமிறங்கியிருக்கிறது.


OnePlus TV Y1S Pro வசதிகள் :


நான் முன்பே சொன்னது போல OnePlus TV 43 Y1S Pro மேம்படுத்தப்பட்ட 43-இன்ச் 4K UHD டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. திரையில்  படத்தின் தரத்தை மேம்படுத்த காமா எஞ்சினை ஒன் பிளஸ் நிறுவனம் தனது புதிய டிவியில் அறிமுகப்படுத்தியுள்ளது டிஸ்ப்ளே HDR10+, HDR10 மற்றும் HLG வடிவ ஆதரவு இருப்பதால் சிறந்த பார்வை அனுபவத்திற்கு வழங்கும் என்பதில் சந்தேகமே இல்லை.  டிவி பிரீமியம் மற்றும் bezel-less டிசைனை கொண்டுள்ளது. 24W இல்  ஒருங்கிணைந்த ஆடியோவை வழங்கும்  இரண்டு முழு அளவிலான ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி ஆடியோ வசதியை கொண்டிருக்கிறது. OnePlus TV 43 Y1S Pro.ஸ்மார்ட் மேனேஜர் அம்சத்துடன் வெளியாகவுள்ளது. இதில் OnePlus Connect 2.0 தொழில்நுட்பம் உள்ளது. இது OnePlus ஸ்மார்ட்போன் பயனாளர்களுக்கான சிறந்த வசதியை வழங்கியுள்ளது. அதாவது Wi-Fi அல்லது செல்லுலார் இணைப்பைப் பயன்படுத்தாமல் நேரடியாக டிவியுடன் மொபைலை  இணைத்துக்கொள்ளலாம். அதே போல ஒன் பிளஸ் இயர்பட்ஸ் மற்றும் ஒன் பிளஸ் வாட்சினை ஸ்மார்ட் டிவியுடன்  இணைக்கவும் அனுமதிக்கிறது.




அதே போல OnePlus TV 43 Y1S Pro ஆனது கேமிங் தொழில்நுட்ப வசதிகளுடன் வருகிறது. இதன் மூலம் HDMI வழியாக கேமிங் கன்சோலை இணைக்க முடியும். கேம் விளையாடும் பொழுது ஸ்மூத்தான அனுபவத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. இதற்காக ஆட்டோ லோ லேட்டன்சி மோட் வசதி டிவியில் பொருத்தப்பட்டுள்ளது. இது தவிர குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் என இருவருக்குமான மோட்களை ஆதரிக்கிறது. OxygenPlay 2.0 வசதி , ஆண்ட்ராய் 10 இயங்குதள வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதை தவிர டிவியை பொருத்தியவுடன் 230 க்கும் மேற்பட்ட நேரடி சேனல்களுக்கான உடனடி அணுகலை பயனாளர்கள் பெறுவார்கள்.



எப்போது கிடைக்கும் OnePlus TV 43 Y1S Pro ?


OnePlus TV 43 Y1S Pro ஸ்மார்ட் டிவியானது ஏப்ரல் 11 முதல் விற்பனைக்கு வரவுள்ளது. இதன் விலை ரூ. 29,999 என நிர்ணயம் செய்யப்பட்டுளது. இதனை Amazon மற்றும் OnePlus.in போன்ற  ஆன்லைன் ஸ்டோரில்  வாங்க முடியும். கூடுதலாக, இது OnePlus எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்ஸ், க்ரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் பிற ஆஃப்லைன் பார்ட்னர் ஸ்டோர்கள் வழியாகவும் வாங்கிக்கொள்ளலாம்.