இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் முன்னணி டிவி நிறுவனங்களில் சோனி நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்தின் டிவி வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் தொலைக்காட்சி பெட்டிகளுக்கு தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர். சோனி டிவி விலை அதிகமாக இருந்தாலும் அதை வாங்க பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். 


இந்நிலையில் சோனி நிறுவனம் தற்போது தன்னுடைய அடுத்த புதிய டிவியை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி சோனி புதிய பிராவியா X80K  டிவி அறிமுகம் செய்துள்ளது. 


சோனி பிராவியா X80K  டிவி:


சோனியின் இந்தப் புதிய டிவி டிரைலுமினஸ் ப்ரோ டிஸ்பிளே கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தத் தொலைக்காட்சியில் வரும் காட்சிகள் நல்ல தரத்தில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கூகுள் டிவி வசதியை கொண்டுள்ளது. மேலும் இதில் டால்பி அட்மாஸ், டால்பி விஷன் உள்ளிட்ட வசதிகளும் இடம்பெற்றுள்ளது. 




இந்தப் புதிய டிவியை கேமிங் விளையாட்டிற்கும் சிறப்பாக பயன்படுத்தம் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆட்டோ ஹெச் டிஆர் மேப்பிங், ஆட்டோ ஜெனரிக் பிக்சர் மோட் ஆகியவை உள்ளன. இவற்றுடன் சேர்ந்து கூகுள் டிவி வாய்ஸ் அசிஸ்டெண்ட் வசதியும் அமைந்துள்ளது. ஆப்பிள் ஏர் ப்ளே 2 மற்றும் ஹோம் கிட் ஆகியவற்றுடன் சிறப்பாக செயல்படும் வகையில் இந்த டிவியில் வசதிகள் உள்ளன. இந்த சோனி பிராவியா X80K  டிவியின்  55 இன்ச் மாடலின் விலை ரூ 94,990. எனினும் இந்த மாடலின் 43 இன்ச், 50 இன்ச்,65இன்ச் மற்றும் 75 இன்ச் டிவிகளின் விலையை இன்னும் சோனி அறிவிக்கவில்லை. இந்த மாடல்களின் விலை விரைவில் வெளியாகும் என்று கருதப்படுகிறது. 


கடந்த மாதம் சோனி நிறுவனத்தின் X75K டிவி வெளியானது. அந்த டிவி 43 இன்ச், 50 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் மாடல்களில் வெளியானது. அந்த டிவிக்கு பிறகு தற்போது சோனி இந்த புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க:பட்ஜெட் விலையில் ஐபோன் தரத்தில் புதிய மொபைல்! புதிய பிராண்ட்! விவரங்கள் உள்ளே!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண